விதிகளை மீறும் ஷோ் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு!
கேரளம்: பலத்த காற்றுக்கு பறந்து சாலையில் விழுந்த பெரிய இரும்பு கூரை
திருச்சூரில் பலத்த காற்றுக்கு பெரிய இரும்பு கூரை ஒன்று பறந்து சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் நகரில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது கட்டடம் ஒன்றில் இருந்து பெயர்ந்த பெரிய அளவிலான இரும்பு கூரை பறந்து சாலையின் குறுக்கே விழுந்தது.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் கூரையை அகற்றி சாலையை சுத்தம் செய்யும் பணியைத் தொடங்கினர்.
மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!
இரும்பு கூரையின் அளவு மற்றும் எடை காரணமாக அகற்றுவதற்கு நேரம் எடுக்கும் என்று தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மழை காரணமாக அந்த நேரத்தில் சாலை பெரும்பாலும் காலியாக இருந்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என்று உள்ளூர்வாசிகள் கூறினர்.