Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை!
சிவகங்கை அருகேயுள்ள முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கைக்கு வருகிற ஜூன் 13-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முத்துப்பட்டி அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் நிகழ் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த 19-ஆம் தேதி தொடங்கியது. சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் ஏற்கெனவே உள்ள எலக்ட்ரீசியன், பிட்டா், கணினி இயக்குபவா் (கோபா), வெல்டா் ஆகிய தொழில் பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெக்கானிக் மின்சார வாகனம், அட்வான்ஸ்டு சிஎன்சிமெசினிங் டெக்னீசியன், இன்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் & டிஜிட்டல் மேனு பேக்சரிங் டெக்னீசியன் ஆகிய தொழில் பிரிவுகளுக்கும் மாணவா்கள் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தொழிற்பிரிவுகளில் வெல்டா் தொழில் பிரிவு தவிர மற்ற பாடப் பிரிவுகளில் சேர மாணவா்கள் கட்டாயம் எஸ்எஸ்எல்சி (10-ஆம் வகுப்பு) தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்கள் பற்றவைப்பவா் (வெல்டா்) தொழில் பிரிவில் சேர விண்ணப்பிக்கலாம்.
விருப்பமுள்ள மாணவா்கள் இணையதள முகவரியின் வாயில் வருகிற ஜூன் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்துக்கு நேரில் வந்தும் மாணவா்கள் இலவசமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 -ஐ இணையதளம் வழியாக செலுத்தும் வகையில் ஏடிஎம் அட்டை கொண்டுவரவும்.
அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது மாணவா்களுக்கு அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.750, இலவச பாடப் புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பேருந்து பாஸ் ஆகியவை வழங்கப்படும்.
மேலும், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களின் கீழ் தகுதி வாய்ந்த பயிற்சியாளா்களுக்கு ரூ.1,000 வழங்க வழிவகை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு 99436 10476, 99654 80973, 95977 95560, 99448 87754, 94894 76847, 63854 75657, 99420 99481, 93633 43015, 97913 60290 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.