Parasakthi: 'சிவகார்த்திகேயனுக்காக வெயிட்டிங்..!' - அப்டேட் கொடுத்த சுதா கொங்கரா
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடிப்பில் ‘பராசக்தி’ படம்உருவாகி வருகிறது.
டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரிக்கிறார். இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சுதா கொங்கராவிடம் ‘பராசக்தி’ படம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலளித்த அவர், “ ‘பராசக்தி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் 40 நாட்கள் இருக்கின்றது. சிவகார்த்திகேயன் வரட்டும்னு வெயிட் பண்றோம்.
அவர் தற்போது ‘மதராஸி’ படத்தின் படப்பிடிப்பிற்காக இலங்கையில் இருக்கின்றார். அதை முடித்துக்கொண்டு வந்தவுடன் பராசக்தி படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை துவங்குவோம்” என்றிருக்கிறார்.
மேலும் இப்படம் இந்தி திணிப்பு பற்றிய படமா என கேள்வி எழுப்பியதற்கு, “மீடியாவில் தான் அப்படி பேசுறாங்க, ஆனால் நான் இதுவரை அப்படி சொன்னதே இல்லை. இது சகோதரர்களின் கதை அவ்வளவு தான்” என்று பதிலளித்திருக்கிறார்.
தொடர்ந்து விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்துடன் பராசக்தி மோதவுள்ளதா? என்ற கேள்விக்கு “மீடியாக்களில் தான் இந்த விஷயத்தை பற்றி பெரிதாக பேசுகின்றனர்.

ஆனால் நாங்க இன்னும் அதிகாரப்பூரவமாக அறிவிக்கவே இல்லையே. ரிலீஸ் குறித்து எல்லாம் நான் முடிவெடுக்க முடியாது. தயாரிப்பாளர் தான் ரிலீஸ் பற்றி முடிவெடுக்கவேண்டும்” என சுதா கொங்கரா கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...