செய்திகள் :

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

post image

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவையில் உள்ள கரும்பு கிரயத் தொகை வழங்குவதற்காக ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் சனிக்கிழமை வெளியிட்ட செய்தி:

கரும்பு விவசாயிகளின் நலன் மற்றும் சர்க்கரை ஆலைகளின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் 16 கூட்டுறவு, 2 பொதுத்துறை,22 தனியார் என மொத்தம் 40 சர்க்கரை ஆலைகள் உள்ளன.

கரும்பு விவசாயிகளின் மீது அக்கறை கொண்ட இந்த அரசு கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்காகவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை அதிகரிக்கவும் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கரும்பு விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கி வருகின்றது.

முதல்வர் ஆணையின்படி, 2025-26 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2024-25 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு முன்எப்போதும் இல்லாத அளவிற்கு, டன் ஒன்றுக்கு ரூ.349 சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்து, இத்திட்டத்தினை செயல்படுத்த ரூ.297 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன், மத்திய அரசு நிர்ணயம் செய்த கரும்பு விலைக்குமேல் சிறப்பு ஊக்கத்தொகையாக 2020-21 அரவைப் பருவத்திற்கு டன் ஒன்றுக்கு ரூ.192.50, எனவும், 2021-22 மற்றும் 2022-23 அரவைப் பருவங்களுக்கு ரூ.195 எனவும், 2023-24 அரவைப் பருவத்திற்கு ரூ.215 எனவும் 2024-25 அரவைப் பருவத்திற்கு ரூ.349 என வழங்கி கரும்பு விலை டன் ஒன்றுக்கு ரூ.2,750-லிருந்து ரூ.3,500 என உயர்த்தப்பட்டுள்ளது.

பினராயி விஜயன் பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கடந்த நான்கு ஆண்டுகளாக சிறப்பு ஊக்கத்தொகையாக 4,79,030 கரும்பு விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.848.16 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2024-25 அரவைப் பருவத்திற்கு சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.297- கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரவைப் பருவம் நிறைவு பெற்றபின் கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 6,09,030 கரும்பு விவசாயிகள் ரூ.1,145.12 கோடி சிறப்பு ஊக்கத்தொகை பெற்று பயனடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்ட முதல்வர் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட ஏதுவாக எட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்துள்ளார்கள். இத்தொகை சம்மந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு விரைவில் அனுப்பிவைக்கப்படும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் வரலாற்றில் முதன்முறையாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை மற்றும் கரும்பு கிரயத் தொகையாக சுமார் ரூ.1,945.25 கோடி வழங்கப்பட்டுள்ளது.

கரும்பு சாகுபடிப் பரப்பினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்தவும் முதல்வர் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு அரசால் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரும்பு விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, அதிக பரப்பளவில் கரும்பு சாகுபடி மேற்கொண்டு, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கி பயன்பெறுமாறு அமைச்சா் ராஜேந்திரன் கூறியுள்ளாா்.

கனமழை எச்சரிக்கை: கோவை மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைள் என்னென்ன..?

கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கையைத் தொடா்ந்து, மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீ... மேலும் பார்க்க

மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது

சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களில் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம் தொடங்கியது... மேலும் பார்க்க

பினராயி விஜயன் பிறந்தநாள்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

கேரள முதல்வர் பினராயி விஜயன் பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று(மே 24) தனது 80 ஆவது பிறந்தநாளினைக் க... மேலும் பார்க்க

நகை பறிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரியை அடுத்த வைகுந்தம் கிராமம், வாழகுட்டை என்ற பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் தோடு, மூக்குத்திகளை பறித்து சென்ற நபரை தனிப்படை போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில் சங்ககி... மேலும் பார்க்க

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை இன்று (மே 24) தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கேரளத்தில் வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்தாண்டு முன்கூட்டியே தொடங்கிய... மேலும் பார்க்க

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

சென்னை, கடலூர், நாகை உள்ளிட்ட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை கரையைக் கடக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள... மேலும் பார்க்க