செய்திகள் :

‘மோசம்..’ ஷங்கர் மீது கேம் சேஞ்சர் எடிட்டர் குற்றச்சாட்டு!

post image

இயக்குநர் ஷங்கருடன் பணியாற்றிய அனுபவம் குறித்து கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் பேசியுள்ளார்.

இந்தியாவிலும் பிரம்மாண்ட படங்கள் எடுக்கப்படுகின்றன என உலகிற்குக் காட்டிய இயக்குநர்களில் ஒருவர் ஷங்கர். ஜெண்டில்மேன் மூலம் இயக்குநராக அறிமுகமானர், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என பல வெற்றிப்படங்கள் மூலம் இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இயக்குநராக வலம் வந்தார்.

எந்திரன், ஐ படங்களின் மூலம் தொழில்நுட்ப ரீதியாகவும் பலரையும் ஆச்சரியப்படுத்தினார்.

ஆனால், சினிமாவில் எல்லா ஜாம்பவான்களுக்கும் மோசமான காலம் உண்டு என்பதுபோல் ஷங்கர் இந்தியன் - 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் கடும் விமர்சனங்களைச் சந்தித்து தன் மார்க்கெட்டை இழந்திருக்கிறார்.

அடுத்ததாக, வேள் பாரி நாவலை அவர் திரைப்படமாக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் எடிட்டர் ஷமீர் முகமது இயக்குநர் ஷங்கர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.

ஒரு நேர்காணலில் பேசிய ஷமீர், “அன்பறிவு மாஸ்டர்கள் மூலம் கேம் சேஞ்சர் படத்தில் எடிட்டராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. அப்படத்தை ஷங்கர் 7.30 மணி நேரப் படமாக என்னிடம் ஒப்படைத்தார். அதை 3 மணி நேரமாக மாற்ற நான் சென்னையிலேயே 350 நாள்கள் இருந்தேன். கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் செலவிட்டு பின் அப்படத்திலிருந்து விலகினேன். ஷங்கருடன் பணியாற்றியது மிக மோசமான அனுபவமாகவே இருந்தது. ” எனக் கூறியிருக்கிறார்.

இதைக் கண்ட ரசிகர்கள், தயாரிப்பாளரின் பணத்தைக் கொஞ்சம்கூட மதிக்கத் தெரியாதவர் ஷங்கர் எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

எடிட்டர் ஷமீர் சார்லி, அங்கமாலி டயரீஸ்,  ஏஆர்எம், நேற்று (மே. 23) வெளியான நரிவேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களில் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

கேம் சேஞ்சர் படத்தில் இருந்து ஷமீர் முகமது விலகியதும், அப்படத்தின் எடிட்டராக ரூபன் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஏன் நம்மால் ரூ. 1000 கோடி படங்களைக் கொடுக்க முடியவில்லை? மணிரத்னம் பதில்!

பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!

பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது. தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்த பாலிவுட் நடிகரான அஜாஸ் கான் பிக்பாஸ் - 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். அட... மேலும் பார்க்க

ஸ்பிரிட் படத்தில் அனிமல் பிரபலம்!

அனிமல் படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகை திரிப்தி திம்ரி ஸ்பிரிட் படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.அர்ஜுன் ரெட்டி, அனிமல் படங்களின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்... மேலும் பார்க்க

குபேரா அப்டேட்!

குபேரா படத்திற்கான புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.பான் இந்தியப் படம... மேலும் பார்க்க

ஆகாஷ் பாஸ்கரனால் பராசக்தி படப்பிடிப்பு பாதிக்கப்படுமா?

இயக்குநர் சுதா கொங்காரா, சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் பராசக்தி படத்தின் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அமரன் வெற்றிக்குப் பின் நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி, மதராஸி ஆகிய படங்களில் ந... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பில் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் உடல் எடை குறைப்பில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதற்கான முயற்சியில் உள்ளார். இதற்காக, இருவரும் அடிக்கடி அறிக்கை வெள... மேலும் பார்க்க

சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

சனி பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாட... மேலும் பார்க்க