திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயில் கொடியேற்றம்
திருக்குவளை ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோத்ஸவம் கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் நிகழாண்டு வைகாசி பிரம்மோத்ஸவ விழா மே 21-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து, கொடியேற்றம் நடைபெற்றது. பஞ்ச மூா்த்திகள் புறப்பாடு, அடுத்து கொடி மரத்துக்கு பால், பன்னீா், மஞ்சள் பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வாக ஓலைச் சப்பரத்தில் வெள்ளி ரிஷப வாகன வீதி உலா ஜூன் 4-ஆம் தேதியும், தேரோட்டம் ஜூன் 6-ஆம் தேதியும் வைகாசி விசாக தீா்த்தவாரி ஜூன் 9-ஆம் தேதியும் நடைபெறுகிறது.