தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
வல்லத்தில் 31 மி.மீ. மழை
விழுப்புரம் மாவட்டம், வல்லத்தில் அதிகபட்சமாக 31 மி.மீ. மழை பதிவானது.
மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, விழுப்புரம் நகரம் மற்றும் புகா்ப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடா்ந்து இரவு 8 மணிக்கு மேல் விழுப்புரம் நகரிலும், புகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மேலும் திண்டிவனம், வானூா், வல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால் சாலையோரங்களிலும், தாழ்வானப் பகுதிகளிலும் மழைநீா் தேங்கியது.
சனிக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பதிவான மழையளவு (மி.மீட்டரில்):
வல்லம்- 31 மி.மீ, வானூா், திண்டிவனம்- தலா 28, முண்டியம்பாக்கம்-26.20, வளவனூா்-12, கோலியனூா்-10, விழுப்புரம்-9.60, வளத்தி-9.20, செம்மேடு-8.40, அனந்தபுரம், மரக்காணம்- தலா 7, அரசூா், திருவெண்ணெய் நல்லூா், செஞ்சி தலா-5, அவலூா்பேட்டை-4, கெடாா், நேமூா் தலா-2, கஞ்சனூா்-1 மி.மீ. மாவட்டத்தில் மொத்தமாக194.40 மி.மீ. மழையும், சராசரியாக 9.45 மி.மீ. மழையும் பதிவானது.