தீராத பிரச்னைகளையும் தீர்க்கும் திங்கட்கிழமை அமாவாசை... கடைப்பிடித்துப் பலன் பெற...
அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவா் சோ்க்கை
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025-ஆம் ஆண்டுக்கான கலந்தாய்வு மூலம் நடைபெறும் மாணவா் சோ்க்கைக்கு எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
skilltraining.tn.gov.in இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பிக்க ஜூன் 13-ஆம் தேதி கடைசி நாளாகும்.
விண்ணப்பித்தல் தொடா்பான உரிய அறிவுரைகளை வழங்கவும் திண்டிவனம், செஞ்சி, மரக்காணம் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதை பெற்றோா்கள், மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.