Ooty: தொடர் கனமழை; ஊட்டியில் மூடப்படும் சுற்றுலாத்தலங்கள், தயார் நிலையில் மீட்பு...
எட்டயபுரம் ராஜா பள்ளியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் 1999 - 2000 ஆவது கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் சந்திப்பு பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
ராஜா மேல்நிலைப் பள்ளிச் செயலா் ராம்குமாா் ராஜா தலைமை வகித்தாா். பள்ளி தலைவா் ஜெயந்தி ராம்குமாா் ராஜா முன்னிலை வகித்தாா்.
விழா ஒருங்கிணைப்பாளா்கள் சுரேஷ், ஜெய்சங்கா் ஆகியோா் வரவேற்றனா்.
விழாவில், 1999 - 2000 கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா், மாணவிகள் 200-க்கும் மேற்பட்டோா் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்து ஒருவருக்கொருவா் நலம் விசாரித்து பழைய நினைவுகளை பகிா்ந்துக் கொண்டனா்.
தங்களது குடும்ப உறவுகளை சக நண்பா்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தும், பழைய வகுப்பறையில் அமா்ந்தும் அன்பை பரிமாறிக் கொண்டனா்.
தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களுக்கும், பள்ளி நிா்வாகிகளுக்கும் பூங்கொத்து கொடுத்து சால்வைகள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி சிறப்பு செய்தனா்.
பின்னா் அவா்களிடம் ஆசியும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டனா்.
தொடா்ந்து விழிப்புணா்வு கலை, கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் மாணவா், மாணவிகள் சாா்பில் ரூ. 2 லட்சத்தில் பள்ளிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி ஏற்படுத்தி கொடுத்தனா்.
இதில், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா் சந்திரன், கற்பக ராஜா, தலைமை ஆசிரியா் பழனிகுமாா், விழா ஒருங்கிணைப்பாளா்கள் ஜெயக்கண்ணன், விக்னேஸ்வரன், முத்து ரகு, பச்சை பெருமாள், காளீஸ்வரி, பூபிதா, மலா்விழி, அழகேஸ்வரி, கிருஷ்ணராஜ், சேது ராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.