செய்திகள் :

Doctor Vikatan: பீரியட்ஸ் பிரச்னைகளுக்கு கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா?

post image

Doctor Vikatan: எனக்கு 38 வயதாகிறது. கடந்த சில வருடங்களாக பீரியட்ஸின்போது அதிகமாக ப்ளீடிங் ஆகிறது. இதனால் எனக்கு ரத்தச்சோகையும் வந்துவிட்டது. மருத்துவரை அணுகினால், குழந்தை பெற்றுவிட்டதால், இனி கர்ப்பப்பை குறித்து கவலைப்படத் தேவையில்லை என்றும் அதை நீக்கிவிடுமாறும் சொல்கிறார்.  என்னுடைய தோழிகள் சிலரும் இதுபோல வேறு வேறு பிரச்னைகளுக்காக கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்கள். பீரியட்ஸ் தொடர்பான பிரச்னை என்றாலே, கர்ப்பப்பையை அகற்றுவதுதான் நிரந்தரமான தீர்வா...?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்  

மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்

பீரியட்ஸ் தொடர்பான எல்லாப் பிரச்னைகளுக்கும் கர்ப்பப்பையை அகற்றுவது தீர்வாகாது. அது அவசியமும் இல்லை. எனவே, முதலில் உங்களுக்கு பீரியட்ஸின் போது அதிக ப்ளீடிங் இருப்பதற்கான காரணத்தை  கண்டறிய வேண்டும். அதற்கேற்பவே சிகிச்சையை முடிவு செய்ய வேண்டும்.

ஸ்கேன் செய்து பார்த்து ஃபைப்ராய்டு கட்டிகள் இருக்கின்றனவா என்று பார்க்க வேண்டும். அடுத்து அடினோமயோசிஸ் பாதிப்பு இருக்கிறதா என்றும் கண்டறிய வேண்டும். 

அடினோமயோசிஸ் (Adenomyosis) என்றால் கர்ப்பப்பை வழக்கத்தைவிட சற்று வீங்கியிருப்பது. பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது. அதைத்தான் மாதவிடாய் சுழற்சி என்கிறோம். சில பெண்களுக்கு இந்த எண்டோமெட்ரியமானது, கரப்பப்பையின் தசைகளுக்கு நடுவில் வளர ஆரம்பிக்கும்.  அதுதான் அடினோமயோசிஸ்.

ஒவ்வொரு மாதவிடாயின் போதும் எண்டோமெட்ரியம் லைனிங் உதிர்ந்து வெளியே வருவது போல, கர்ப்பப்பை தசைகளுக்கு நடுவிலுள்ள பகுதியால் உதிர்ந்து வெளியே வர முடியவில்லை. அதனால்தான் இந்த பாதிப்புள்ள பெண்களுக்கு கர்ப்பப்பை பெரிதாகிறது. மாதவிடாயின் போது கடுமையான  வலியும் இருக்கும்.

பெண்களுக்கு ஒவ்வொரு மாதவிடாயின்போதும் எண்டோமெட்ரியம் என்கிற லைனிங் உதிர்ந்து வெளியே வருகிறது.

கர்ப்பப்பையின் லைனிங்கான எண்டோமெட்ரியம் பகுதியில் ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்றும் தெரிந்துகொள்ள வேண்டும்.

அதற்கு டி அண்ட் சி செய்து பார்க்கலாம். மேற்கூடிய பிரச்னைகளை எல்லாம் பார்த்துவிட்டு  உங்கள் மருத்துவர் கர்ப்பப்பையை நீக்குவதுதான் ஒரே தீர்வு என்று முடிவெடுக்கிறாரா எனப் பாருங்கள்.

கர்ப்பப்பையோடு  ஓவரீஸ் எனப்படும் சினைப்பைகளையும் இளம் வயதில் அகற்ற மாட்டோம். அந்த சினைப்பைகள்தான் பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜெனை கொடுப்பவை. மெனோபாஸ் வயதுவரை சினைப்பைகளிலிருந்து ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரக்கும். எனவே, சினைப்பைகளில் எந்தப்  பிரச்னையும் இல்லாதபட்சத்தில் அவற்றை விட்டுவிட்டு, கர்ப்பப்பையை மட்டும் நீக்கிக்கொள்ளலாம்.

கர்ப்பப்பையை அகற்றுவது அவசியமா என்பது குறித்து நீங்கள் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டுகளுடன் இன்னொரு மருத்துவரிடம் செகண்ட் ஒப்பீனியன் கேட்டு, பிறகு முடிவு செய்யலாம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Doctor Vikatan: குடும்ப பின்னணியில் நீரிழிவு இல்லாதபோதும், கர்ப்ப காலத்தில் டயாபட்டீஸ் வருவது ஏன்?

Doctor Vikatan: என் வயது 32. எங்கள் குடும்பத்தில் பிறந்த வீட்டுப் பக்கமும் சரி, புகுந்த வீட்டுப் பக்கமும் சரி, யாருக்கும் டயாபட்டீஸ் இல்லை. ஆனால், நான் கர்ப்பமாக இருந்தபோது எனக்கு டயாபட்டீஸ் வந்தது. அ... மேலும் பார்க்க

டெஸ்ட் டியூப் பேபி எப்படி உருவாகிறது தெரியுமா?முக்கியமான 5 விஷயங்கள்! | பூப்பு முதல் மூப்புவரை

டெஸ்ட் டியூப் பேபி என்றவுடன், நம் அனைவருக்கும் பொதுவாக நினைவில் வருவது, வட்டமான கருமுட்டையை ஒருபக்கம் கருவி ஒன்று தாங்கி நிற்க, மறுபக்கம் அந்தக் கருமுட்டையை ஓர் ஊசி துளைத்து, அதன் குழாய் வழியாக விந்தண... மேலும் பார்க்க

Doctor Vikatan: பிரேக்அப் ஆன காதல்; நிச்சயமான திருமணம்... வெஜைனாவுக்கான சர்ஜரி அவசியமா?

Doctor Vikatan: என்தோழிக்கு இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் நடக்கவிருக்கிறது. அவளுக்கு இதற்குமுன் காதல் அனுபவமும், அந்தக் காதலருடன் தாம்பத்தியத்தில் ஈடுபட்ட அனுபவமும்இருக்கிறது. எதிர்பாராத விதமாக அ... மேலும் பார்க்க

IVF சிகிச்சையில் குழந்தைக் கனவு நனவாகுமா..? | பூப்பு முதல் மூப்புவரை

"திருமணமாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. இருமுறை கருத்தரித்தபோதும் இருமுறையும் உயிருக்கே ஆபத்தான எக்டோபிக் எனும் சினைக்குழாய் கர்ப்பம் என்பதால், இருமுறையும் அறுவை சிகிச்சை, இனி இயல்பாக கருத்தரிக்கவே இயலாத நில... மேலும் பார்க்க

செயற்கை கருத்தரிப்பு: வெற்றி வாய்ப்பு எவ்வளவு; எத்தனை முறை முயற்சிக்கலாம்? | பூப்பு முதல் மூப்புவரை

செயற்கை கருத்தரிப்பு முறைகளில் முதலாவதும் முக்கியமானதுமான, 'Intra Uterine Insemination' எனும் செயற்கை விந்தூட்டல் அல்லது செயற்கை விந்தேற்றல் முறை பற்றி இன்று தெரிந்துகொள்வோம். அதற்குமுன், வரலாற்றின் ச... மேலும் பார்க்க

Doctor Vikatan: திருமணம் நிச்சயமான மகளுக்கு திடீரென நின்றுபோன பீரியட்ஸ்: மாத்திரை கொடுக்கலாமா?

Doctor Vikatan: என்மகளுக்கு24 வயதாகிறது. பூப்பெய்தியதுமுதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம். இந்நிலையில் திடீரென ... மேலும் பார்க்க