ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்
குபேரா கதை முன்னோட்ட விடியோ!
குபேரா திரைப்படத்திற்கான முன்னோட்ட விடியோ ஒன்றை படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.
நடிகர் தனுஷின் 51-வது படத்தை சேகர் கமூலா இயக்கி வருகிறார். இதில் நாகர்ஜுனா பிரதான பாத்திரத்திலும் நாயகியாக ராஷ்மிகாவும் நடிக்கின்றனர்.
பான் இந்தியப் படமாக உருவாகியுள்ள இப்படத்திற்குக் குபேரா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
குபேரா திரைப்படம் திரையரங்குகளில் வரும் ஜூன் 20 ஆம் தேதி வெளியாகுகிறது. இந்த நிலையில், ட்ரான்ஸ் ஆஃப் குபேரா (trance of kubera) எனப் பெயரிடப்பட்ட விடியோவை இன்று வெளியிட்டுள்ளனர்.
இதில், தொழிலதிபர் ஒருவர் உலகமே தனக்குச் சொந்தமானது என நினைக்கிறார். மறுபுறம் பிச்சைக்காரரான தனுஷும் உலகம் எனக்கானது என நினைப்பரவாகக் காட்டப்படுகிறார்.
இந்த இருவரையும் ஒரு புள்ளியில் இணைக்கும் கதையாக இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.