4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை
சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சேலம் நெடுஞ்சாலை நகரில் முன்னாள் முதல்வர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வீடு உள்ளது. எப்போதும் பாதுகாப்பு நிறைந்த இந்த பகுதியில் போலீசாரும் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து சேலம் போலீஸ் கட்டுப்பாட்டுக்கு தகவல் வந்தது.
அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி
தகவலை அடுத்து அடிப்படையில் சூரமங்கலம் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து அவர் வீடு மற்றும் அந்தத் தெரு பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
மேலும், பல்வேறு இடங்களிலும் மெட்டல் டிடெக்டர் கருவி, வெடிகுண்டு செயலிழப்பு, தடுப்புக் கருவிகள் துணையுடன் நிபுணா்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஒரு மணி நேரம் நீடித்த இந்தச் சோதனையில் வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. இதையடுத்து வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் புரளி என தெரியவந்தது. தொடர்ந்து இபிஎஸ் வீட்டு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.