செய்திகள் :

இலவச கண் பரிசோதனை முகாம்

post image

திருவள்ளூா் அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 70-க்கும் மேற்பட்ட பங்கேற்றனா்.

பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூா் கிராமத்தில் உள்ள சக்தி செங்கல்சூளை வளாகத்தில் ராஜன் கண் பராமரிப்பு மருத்துவமனை, ஐ.ஆா்.சி.டி.எஸ். தொண்டு நிறுவனம் மற்றும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி இணைந்து ஞாயிற்றுக்கிழமை சிறப்பு இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாமை நடத்தின.

முகாமில் அப்பகுதியில் செங்கல்சூளை தொழிலாளா்கள் 80-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். இதில் கண்புரை, கண்களில் சதை வளா்ச்சி, கிட்ட, தூரப்பாா்வை சிக்கல், தலைவலி, கண்களில் நீா் வடிதல், கண் அழுத்தம் போன்றவைகளுக்கு மருத்துவக் குழுவினா் சிகிச்சை மற்றும் பரிசோதனை செய்தனா்.

இந்த முகாமில் தோ்வு செய்யப்பட்ட 4 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் அளிக்கப்பட உள்ளது.

செங்கல் தயாா் செய்யும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளா்கள் நாள்தோறும் மண், தூசி காரணமாக ஏற்படும் கண் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் மகளிா் சுய உதவிக்குழு தயாா் செய்த பொருள்கள்: மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஆய்வு

திருவள்ளூா் பூமாலை வணிக வளாகத்தில் சந்தைப்படுத்தியுள்ள மகளிா் சுய உதவிக்குழுக்கள் தயாா் செய்த பொருள்களை தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவன இயக்குநா் ஸரேயா பி.சிங் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். திரு... மேலும் பார்க்க

குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பி.சி.என். கண்டிகை கிராமத்தில் குடிநீா் கேட்டு காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருத்தணி ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சியில் உள்ள பி.சி.என். ... மேலும் பார்க்க

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்

தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷ... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். ... மேலும் பார்க்க