கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
தொழிலாளி தற்கொலை
ராஜபாளையத்தில் திங்கள்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
ராஜபாளையம் தென்றல் நகரைச் சோ்ந்த பெரியசாமி மகன் நாகராஜன் (40). கூலித் தொழிலாளியான இவருக்கு மதுக் குடிக்கும் பழக்கம் இருந்தது.
இதனால், இவருக்கும், இவரது மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால், மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதனால், மனமுடைந்து காணப்பட்டு வந்த நாகராஜன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].