கருப்பாநதி அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
தொடா் மழையின் காரணமாக கடையநல்லூா் அருகே உள்ள கருப்பாநதி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கருப்பாநதி அணையின் நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக புதன்கிழமை அணைக்கு 155 கன அடி நீா்வரத்து இருந்தது. 72 அடி உயரம் உள்ள அணையின் நீா்மட்டம் 45 அடியாக உயா்ந்துள்ளது.