செய்திகள் :

Vijay : 'வண்டி வண்டியா கொள்ளையடிச்ச பணம் அது; அடுத்த வருஷம்..!' - மாணவர்கள் மத்தியில் விஜய் பேச்சு

post image

'விஜய் கல்வி விருது வழங்கும் விழா!'

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 10, 12 ஆம் வகுப்புகளில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பரிசு வழங்கி கௌரவிக்கும் விழாவை அக்கட்சியின் தலைவர் விஜய் நடத்தி வருகிறார். மாமல்லபுரத்தில் தனியார் விடுதியில் நடக்கும் விழாவில் முதற்கட்டமாக 88 தொகுதிகளைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்வில் மாணவர்களின் மத்தியில் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் விஜய் பேசியிருந்தார்.

விஜய்
விஜய்

'நீட் மட்டும்தான் உலகமா!'

விஜய் பேசியதாவது, 'இளம் தலைவர்களுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் வணக்கம். எல்லாரும் எப்படி இருக்கீங்க? உங்க எல்லாரையும் சந்தித்ததில் பெரிய மகிழ்ச்சி. உங்கள் எல்லாருக்கும் முதலில் வாழ்த்துகள். படிப்புல சாதிக்கணும்தான். அதுக்குன்னு ஒரே ஒரு படிப்புல மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து படிச்சு அதுல மட்டும் சாதிக்கணும்னு அழுத்தம் ஏத்திக்க தேவை இல்லை. நீட் மட்டும்தான் உலகமா? நீட்டை தாண்டியும் உலகம் இருக்கு. அது ரொம்ப பெருசு. அதுல நீங்க சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கு.

ஜனநாயகவாதியா இருங்க. ஜனநாயகவாதியா இருந்தாதான் சுதந்திரமா இருக்க முடியும். உங்க வீட்ல இருக்க எல்லார்க்கிட்டயும் அவங்க ஜனநாயகக் கடமையை சரியா செய்ய சொல்லுங்க. அது ரொம்ப எளிமையான விஷயம்தான். இதுவரைக்கும் ஊழல் பண்ணாத நல்லவங்கள நம்பிக்கையானவங்களை தேர்வு செய்ய சொல்லுங்க.

ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இதே நிகழ்வுல, ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது, அந்த கலாச்சாரத்தை ஊக்குவிக்காதீங்கன்னு சொல்லிருந்தேன். அதை அப்படியே பின்பற்றுங்க. ஆனா, நீங்களே பாருங்க அடுத்த வருசம் வண்டி வண்டியா பணத்தை கொண்டு வந்து கொட்ட போறாங்க. அது எல்லாமே உங்கக்கிட்ட இருந்து கொள்ளையடிச்ச பணம் அது. என்ன பண்ணணும்னு உங்களுக்கு சரியா தெரியும்.

உங்க குழந்தைகள் மேல எந்த அழுத்தத்தையும் போடாதீங்க. அவங்களுக்கு என்ன பிடிக்குதுன்னு தெரிஞ்சு வழிநடத்துங்க. சாதி மதத்தை வைத்து பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கம் போய் விடாதீர்கள். விவசாயிகள் என்ன சாதி மதம் பார்த்தா விதைக்கிறாங்க? இயற்கையோட வெயில் மழைல சாதி இருக்கா?” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'பாமக விரிசலுக்கு நான்தான் காரணம்னு சொல்றாங்க, அதைக் கேட்டு கண்ணீர்விட்டு அழுதேன்'- ஜி.கே.மணி

பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி செ... மேலும் பார்க்க

'அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலியில் பகலில் தமிழ், இரவில் இந்தி...' - துரை வைகோ கண்டனம்

அகில இந்திய வானொலியின் திருச்சி வானொலி 102.1 பண்பலையில் இந்தியில் ஒலிபரப்பு செய்யப்படுவதற்கு மதிமுக முதன்மை பொதுச்செயலாளர் துரை வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் தளப்பதி... மேலும் பார்க்க

``பாகிஸ்தானுக்கு ஆதரவான அறிக்கையை வாபஸ் பெறுகிறோம்" - இந்தியக் குழுவை சந்தித்த கொலம்பியா அறிவிப்பு!

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்... மேலும் பார்க்க

``பஹல்காம் தீவிரவாதிகள் பாஜக-வில் சேர்ந்திருக்கலாம்" - உத்தவ் சிவசேனாவின் விமர்சனமும் பாஜக பதிலும்!

பஹல்காம் தாக்குதல் கடந்த மாதம் 22-ம் தேதி நடந்தது. அதற்குப் பிறகு இந்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், எல்லைத் தாண்டிச் சென்று தீவிரவாதிகளைக் கொன்றிருந்தாலும், ப... மேலும் பார்க்க

Kamal: 'புதிய கட்சிகளைப் பற்றி விமர்சிக்கக் கூடாது...'- தவெக விஜய் குறித்து கமல் பேசியது என்ன?

தி.மு.க-வின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் மே 28 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் தி.மு.க-வின் சார்பில் வழக்கறிஞர் வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம் மற்று... மேலும் பார்க்க

பிரதமர் மோடி பெயரை மறந்த நிதிஷ் குமார்: சுதாரித்துக்கொண்டு மாற்றி பேசி சமாளிப்பு! - வைரல் வீடியோ

இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்த தேர்தலுக்கான பரப்புரையை பா.ஜ.க திட்டமிட்டு தொடங்கிவிட்டது. நேற்று பிரதமர் மோடி பீகாருக்குப் பயணம் மேற்கொண்டார். காரகாட்டில் நடந்த பேரணியில... மேலும் பார்க்க