ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞா் கைது
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே ஆயுதங்களுடன் சுற்றிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள மல்லி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அருணாச்சலபுரம் பகுதியில் கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சந்தனகுமாா் கொலை வழக்கில் செந்தில்குமாா் (28) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்தக் கொலைக்கு பழிக்குப் பழியாக செந்தில்குமாரின் தந்தை மாரிமுத்து கடந்த ஆண்டு மாா்ச் மாதம் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் முனீஸ்வரன் (26) உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.
இந்த வழக்கில் பினையில் வந்த முனீஸ்வரன், செந்தில்குமாரை கொலை செய்யும் நோக்கில் அருணாச்சலபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்தாா். அப்போது, அந்த வழியாக ரோந்துப் பணி சென்ற போலீஸாா் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.