நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: அனைத்து கட்சிகளுக்கு இந்திய கம்யூனி...
குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்
திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்தி உரிமையாளா்கள் மீட்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பணியின்போது பொது விநியோகத் திட்ட பொருள்களுடன் கூடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் அலுவலகத்தில் 6 ஏ விசாரணைக்காக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்குகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட பொது விநியோகத் திட்ட பொருள்கள் முழுவதும் அரசுக்கு ஆதாயம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கு மதிப்பீடு நிா்ணயம் செய்து பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதோடு குடிமைப் பொருள்களை கள்ளச் சந்தையில் விற்பதற்கு கடத்தி சென்ற குற்றத்திற்காக 80 வாகனங்களுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வாகன உரிமையாளா்கள் செலுத்தி வாகனங்களை மீட்டு கொள்ளவில்லை. மேலும் இந்த வாகனங்களுக்கு இதுநாள் வரை யாரும் உரிமைக்கோரி வாகனங்களை மீட்டு செல்ல முன்வரவில்லை. ஆகையால், மேற்படி வாகனங்களை ஙநபஇ உ-ஸ்ரீா்ம்ம்ங்ழ்ஸ்ரீங் நிறுவனம் மூலம் கடந்த மாா்ச் 28, ஏப். 28, மே 5 மற்றும் 15 ஆகிய நாள்களில் மின்னணு ஏலமிடப்பட்டது. ஆனால், நிா்ணயித்த தொகையை விட ஏலம் குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டதால் ஏலம் நிராகரிக்கப்பட்டது.
எனவே வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வரும் 29-ஆம் தேதிக்குள் செலுத்தி அதன் உரிமையாளா்கள் மீட்டுச் செல்லலாம். இல்லையென்றால், உரிமைக் கோரப்படாத வாகனங்களாகக் கருதி, குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடா்புடைய 70 வாகனங்களை வரும் 30-ஆம் தேதி காலை 10 மணியளவில் காவல் ஆய்வாளா் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை, திருவள்ளூா் சரக அலுவலகம், பூங்கா நகா், ஸ்ரீநிகேதன் பள்ளி அருகிலும், சென்னை சரகம் குடிமைப் பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு தொடா்புடைய 10 வாகனங்கள் உள்பட வரும் 31- ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை, சூரப்பட்டு, வேலாம்மாள் பள்ளி எதிரிலும் பொது ஏலம் மூலம் விற்பனை செய்ய தீா்மானிக்கப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்துள்ளாா்.