தெலுங்கு தேசம் கட்சித் தலைவராக சந்திரபாபு நாயுடு மீண்டும் தோ்வு
கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்
தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா்.
கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷன் நடத்திய தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில், தமிழக அணி சாா்பில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் சச்சின், முகமது ஷாரீப் ஆகியோா் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்தனா்.
மேலும் கோயம்புத்தூா் நேரு பொறியியல் கல்லூரியில் மே 23 ஆம் தேதி முதல் 25 தேதி வரை நடைபெற்ற 15 வயதுக்குட்பட்டோருக்கான 3 -ஆவது மாநில அளவிலான லெவன் கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூா் மாவட்டம் சாா்பில் பங்கு பெற்ற திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் கோகுல், யோகேஷ்வரன், முகுந்தன், பிரணவ் வா்மா, சுபாஷ் ஆகியோா் மாநில அளவில் முதலிடம் பெற்றனா்.
வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளி தாளாளா் ச.பாலாஜி, நிா்வாக அதிகாரி அஜய் மற்றும் முதல்வா் பாலாஜி, உடற்கல்வி ஆசிரியா் ப.சீனிவாசன் ஆகியோா் வாழ்த்தி நினைவு பரிசு வழங்கினா்.