சட்ட விரோதமாக மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரம் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
வத்திராயிருப்பு வட்டாட்சியா் சரஸ்வதி தலைமையிலான வருவாய்த் துறையினா் நத்தம்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, நத்தம்பட்டி லட்சுமியாபுரம் பகுதியில் தனியாா் பிளாட்டில் பொக்லைன் மூலம் அனுமதியின்றி மண் அள்ளிய டிராக்டா், பொக்லைன் இயந்திரத்தை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து நத்தம்பட்டி போலீஸாா் இலந்தைகுளத்தைச் சோ்ந்த மகேஸ்வரன், கீழப்பட்டியை சோ்ந்த தேங்கேஷ் ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.