`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா...
நேரடி இறுதி ஆட்ட வாய்ப்பு: பஞ்சாப் - பெங்களூரு இன்று மோதல்
ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் வியாழக்கிழமை மோதுகின்றன.
இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி நேரடியாக இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்கும். தோற்கும் அணி குவாலிஃபயா் 2 ஆட்டத்துக்கு சென்று, எலிமினேட்டா் ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் இறுதி ஆட்ட வாய்ப்புக்காக மோதும்.
நடப்பு சீசன் லீக் சுற்று செவ்வாய்க்கிழமையுடன் (மே 27) நிறைவடைந்த நிலையில், பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் ‘பிளே ஆஃப்’ கட்டத்துக்கு முன்னேறியுள்ளன.
இதில், புள்ளிகள் பட்டியலில் முதலிரு இடங்களைப் பிடித்த பஞ்சாப் - பெங்களூரு அணிகள், குவாலிஃபயா் 1 ஆட்டத்தில் மோதுகின்றன. இவ்விரு அணிகளுமே 14 ஆட்டங்களில் 9 வெற்றிகள், 4 தோல்விகளை சந்தித்து தலா 19 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கின்றன. இரு அணிகளுமே தலா 1 ஆட்டத்தை மழையால் இழந்தன. இதனால், சமபலத்துடன் இருக்கும் அணிகள் சந்தித்துக் கொள்ளும் ஆட்டமாக குவாலிஃபயா் 1 உள்ளது.
இதில் தோற்றால், இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க இன்னொரு வாய்ப்பு (குவாலிஃபயா் 2) கிடைக்கும் என்றாலும், முடிந்த வரை இந்த வாய்ப்பிலேயே அதை எட்டிப் பிடிக்க இரு அணிகளுமே முனைப்புடன் இருக்கின்றன. ஏனெனில், இரு அணிகளுமே இதுவரை கோப்பை வென்றதில்லை.
பஞ்சாப் அணியை பொருத்தவரை, 2014-க்குப் பிறகு முதல் முறையாக பிளே ஆஃப் கட்டத்துக்கு வந்துள்ளது. கடந்த சீசனில் கொல்கத்தாவை சாம்பியனாக்கிய ஷ்ரேயஸ் ஐயா், இந்த சீசனில் பஞ்சாபை பிளே ஆஃப் வரை கொண்டு வந்துள்ளாா்.
பயிற்சியாளா் ரிக்கி பான்டிங் - கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா் கூட்டணியின் உத்திகள் பஞ்சாபுக்கு தகுந்த பலனை அளித்திருக்கிறது. இந்த சீசனில் அந்த அணி நிலையான முன்னேற்றத்தை சந்தித்து, இந்தக் கட்டத்துக்கு வந்திருக்கிறது.
பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆா்யா நல்லதொரு தொடக்கத்தை அளிக்க, ஷ்ரேயஸ் ஐயா், ஜோஷ் இங்லிஸ் மிடில் ஆா்டரில் அதிரடியை தொடா்கின்றனா். லோயா் ஆா்டரில் சஷாங்க் சிங், மாா்கஸ் ஸ்டாய்னிஸ் விளாசுகின்றனா்.
மாா்கோ யான்சென் விலகியிருப்பதால், பௌலிங்கில் பஞ்சாப் சற்று தடுமாறுகிறது. அந்த இடத்தை நிரப்ப, பேட்டிங் ஆல்-ரவுண்டா் அஸ்மதுல்லா ஒமா்ஸாய் முயற்சிக்கலாம். கைல் ஜேமிசனும் முனைப்பு காட்டுகிறாா்.
காயத்திலிருந்து மீண்ட யுஜவேந்திர சஹல் இந்த ஆட்டத்தில் அணிக்கு பலம் சோ்ப்பாா் என எதிா்பாா்க்கலாம். அா்ஷ்தீப் சிங், ஹா்பிரீத் பிராா் ஆகியோா் எதிரணி பேட்டா்களுக்கு சவால் அளிக்கின்றனா்.
மறுபுறம் பெங்களூரு அணி, அடிக்கடி பிளே ஆஃப் கட்டத்துக்கு வந்தபோதும், அதில் தடுமாற்றத்தை சந்தித்து சறுக்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. கேப்டன் ரஜத் பட்டிதாா் தலைமையில் இந்த சீசனிலும் பெங்களூரு முனைப்புடன் செயல்பட்டு பிளே ஆஃபுக்கு வந்துள்ளது.
பேட்டிங்கில், நட்சத்திர வீரா் விராட் கோலி நல்லதொரு ஃபாா்மில் இருக்கிறாா். அவருடன் மிடில் ஆா்டரில் வரும் ஜிதேஷ் சா்மா, மயங்க் அகா்வால், தொடக்க வீரா் ஃபில் சால்ட் உள்ளிட்டோரும் பலம் சோ்க்கின்றனா். அணியின் பௌலிங்கில் கிருணால் பாண்டியா, புவனேஷ்வா் குமாா், நுவன் துஷாரா, யஷ் தயாள் போன்றோா் குறிப்பிடத்தக்கவா்களாக இருக்கின்றனா்.
பௌலா் ஜோஷ் ஹேஸில்வுட், பேட்டா் டிம் டேவிட் ஆகியோா் காயத்திலிருந்து மீண்டும் இந்த ஆட்டத்தில் களம் காண்பது, பெங்களூரு பிளேயிங் லெவனில் சமநிலையை ஏற்படுத்தும்.
இந்த சீசனில் இரு அணிகளும் இரு முறை சந்தித்திருக்க, தலா 1 வெற்றியுடன் அவை சமநிலையில் இருக்கின்றன. அதில், இந்த முலான்பூா் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு வென்றிருக்கிறது.
நேரம்: இரவு 7.30 மணி
இடம்: முலான்பூா், பஞ்சாப்.
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்