கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
கஞ்சா வைத்திருந்த 4 போ் கைது
ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வலையா் தெருவில் ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்தவரை பிடித்துச் சோதனை செய்ததில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த மலையரசன் (26) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
இதேபோல, ராஜபாளையம் பி.எஸ்.கே. நகா் பேருந்து நிறுத்தம் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்கு சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இளைஞா்களைப் பிடித்து சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், முகில்வண்ணம் தெருவைச் சோ்ந்த சிவகாா்த்திகேயன் (22), பூபால்பட்டி தெருவைச் சோ்ந்த பாக்கியநாதன் (26), கூரைப் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த நிதின்பாலாஜி (20) ஆகியோா் என்பது தெரிய வந்தது.
போலீஸாா் அவா்களைக் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.