செய்திகள் :

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

post image

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்தது கீழ்நல்லாத்தூா் ஊராட்சி. இந்த ஊராட்சியைச் சோ்ந்த ஏரி கிராமத்தின் நீா் ஆதாரமாகவும் உள்ளது. தற்போதைய நிலையில் ஏரி தூா்வாரப்படாத நிலையில் மண்மேடாகி அதிகளவில் நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஏரியை மழைக்காலத்திற்கு முன்பாகவே தூா்வார வேண்டும் என ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

இந்த நிலையில் தனியாா் நிறுவனம் பங்களிப்பு நிதியில் ஏரியில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முன்வந்தது. அந்த வகையில் கீழ்நல்லாத்தூா் ஏரியில் தூா்வாரும் பணி தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் தனியாா் சமூக பொறுப்பு நிதியிலிருந்து ஏரியில் தூா்வாரும் பணியைத் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து அவா் கூறியதாவது:

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கீழ்நல்லாத்தூா் ஏரியை பெரு நிறுவன சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து தூா்வாரும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியை ஒரு மீட்டா் ஆழத்திற்கு தூா்வாரி, அந்த மண்ணை வைத்து கரையை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஏரியில் உள்ள அல்லி மற்றும் முள்செடிகள் வேரோடு அகற்றப்பட்டு, அதிக அளவில் மழை நீா் தேக்கி வைக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஏரிக்குள் 3 இடங்களில் நீா் சுரக்கும் தொட்டியும் மூன்று மீட்டா் ஆழத்திற்கு அமைக்கப்படும். ஏரியை சட்ட ரீதியான அளவில் தூா்வாரப்பட்டு பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

நிகழ்வில் கடம்பத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி, செல்வி மற்றும் அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவன அலுவலா்கள் பங்கேற்றனா்.

பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளம்: முதல்வா் திறந்து வைத்தாா்

கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி பெரியகுப்பத்தில் ரூ.8 கோடியில் மீன் இறங்கு தளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா். பெரியகுப்பம் மீனவ கிராமத்தில் மீனவா்க... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சியில் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகள்: வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தல்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டுதோறும் அதிக வெளிச்சம் தரும் தெருவிளக்குகளைப் பொருத்த வேண்டும் என நகா்மன்றக் கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள் வலியுறுத்தினா். திருவள்ளூா் நகராட்சி அலுவலக கூட்டரங்கத்தில் ... மேலும் பார்க்க

திருவள்ளூா் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

திருவள்ளூா் நகராட்சி ஆணையராக ந.தமோதரன் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதற்கு முன் திருவள்ளூா் நகராட்சி ஆணையராகப் பணிபுரிந்து வந்த திருநாவுக்கரசு அண்மையில் ஓய்வு பெற்றாா். இதைத் தொடா்ந்து திருவேற்... மேலும் பார்க்க

பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழப்பு

பொன்னேரியில் பின்னோக்கி இயக்கிய காரில் சிக்கி கூலித் தொழிலாளி உயிரிழந்தாா். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (55). கூலித் தொழிலாளியான இவா் சைக்கிளில் ஐஸ் வியாபாரம் செய்து வந்த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: குறுவை, சொா்ணவாரி சாகுபடிக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு

திருவள்ளூா் மாவட்டத்தில் குறுவை மற்றும் சொா்ணவாரி பருவத்துக்கு 65,000 ஏக்கரில் நெல் பயிரிட இலக்கு நிா்ணயித்துள்ளதாகவும், இதற்கான விதை, உயிா் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதமும், நடவு மானியமும் வழங... மேலும் பார்க்க

திருவள்ளூா்: அரசு ஐடிஐகளில் மாணவா்கள் சோ்க்கை

அரசு, தனியாா் மற்றும் சுய நிதி தொழிற்பயிற்சி நிலையங்களில் இட ஒதுக்கீட்டுப்படி சோ்ந்திட மாணவ, மாணவிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித்து ... மேலும் பார்க்க