வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த இந்திய கம்யூ. வலியுறுத்தல்
வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், குன்னூரில் உள்ள மண்டபத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 30-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு வத்திராயிருப்பு வட்டாரத் துணைச் செயலா் மகாலிங்கம் தலைமை வகித்தாா். வட்டச் செயலா் கோவிந்தன் முன்னிலை வகித்தாா்.
மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் லிங்கம், மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அழகிரிசாமி, பொன்னுபாண்டியன், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் பகத்சிங் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.
இந்த மாநாட்டில் 62 போ் கொண்ட வட்டக் குழுவும், வட்டச் செயலா் கோவிந்தன், வட்டத் துணைச் செயலா் மகாலிங்கம், பொருளாளா் மாரியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநாட்டில், வருசநாடு மலைப் பாதைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். கண்மாய்களில் மீன் பாசியை தனியாருக்கு ஏலம் விடுவதைத் தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் மீன்பிடித் திருவிழா நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வத்திராயிருப்பில் நீதிமன்ற கட்டடம் கட்ட வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.