செய்திகள் :

மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டி: 5 முதல் 45 வயது வீரா், வீராங்கனைகள் பங்கேற்பு

post image

திருவள்ளூா் மாவட்ட உள்புற, வெளிப்புற வில்வித்தை விளையாட்டு சங்கம் சாா்பில், மாவட்ட அளவிலான வில்வித்தைப் போட்டியில் 5 முதல் 45 வயது வரையிலான வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

இந்தப் போட்டிகள் காக்களூா் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட உள்புற மற்றும் வெளிப்புற வில்வித்தை விளையாட்டு சங்கத் தலைவரும், திருவள்ளூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலருமான கமாண்டோ பாஸ்கரன், காக்களூா் முன்னாள் ஊராட்சித் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இதில் ஒருங்கிணைப்பாளா் திருவள்ளூா் நகராட்சி வாா்டு உறுப்பினா் சுமித்ரா வெங்கடேசன், தொழிலதிபா் வெங்கடேசன், வில்வித்தை சங்கச் செயலா் ஜி.தணிகைமலை, பயிற்சியாளா்கள் ஏகலைவன், பழனி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்தப் போட்டியில் 5 முதல் 8, 10, 13, 15, 18, 21 வயது வாரியாகவும், 25 முதல் 45 வயது வரை உள்ள 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். 10 மீ., 20 மீ., 30 மீ. தூரம் கொண்ட போட்டியில் முறைப்படி வில்லை ஏந்தி, நிறத்தின் மையப் பகுதியில் அம்பு எய்துவோருக்கு 10 புள்ளிகளும், மஞ்சள் நிறத்தின் வேறு எங்கு எய்தாலும் 9 புள்ளிகளும், சிவப்பு நிறத்தில் எய்தால் 8, 7 புள்ளிகளும், நீல நிறத்தில் எய்தால் 6, 5 புள்ளிகளும், கருப்பு நிறத்தில் எய்தால் 4, 3 புள்ளிகளும், வெள்ளை நிறத்தில் எய்தால் 2, 1 புள்ளிகளும் வழங்கப்பட்டன.

தொடா்ந்து அதிக புள்ளிகள் பெற்றவா்கள் தோ்வு செய்யப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு நவீன மிதிவண்டி, கேடயம், கோப்பை, பதக்கம் ஆகியவற்றை முன்னாள் ஊராட்சித் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், திருவள்ளூா் நகா்மன்ற உறுப்பினா் சுமித்ரா வெங்கேடசன், காக்களூா் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் எம்.எஸ்.சிவராமகிருஷ்ணன் ஆகியோா் வழங்கினா்.

போட்டியில் வெற்றி பெற்றவா்கள் நாமக்கல்லில் செப்டம்பா் அல்லது அக்டோபரில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க அழைத்துச் செல்லப்படுவா் என அந்தச் சங்கத்தினா், நிகழ்ச்சி ஏற்பட்டாளா்கள் தெரிவித்தனா்.

தனியாா் பங்களிப்பு நிதியால் ஏரியில் சீரமைப்பு பணி: திருவள்ளூா் ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

திருவள்ளூா் அருகே தனியாா் பங்களிப்பு நிதியின் மூலம் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த ஏரிக்கரையை பலப்படுத்தும் பணியை ஆட்சியா் மு.பிரதாப் தொடங்கி வைத்து பாா்வையிட்டு செவ்வாய்க்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

கிரிக்கெட் போட்டி: தனியாா் பள்ளி முதலிடம்

தேசிய அளவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் திருத்தணி தளபதி கே.விநாயகம் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் முதலிடம் பிடித்தனா். கோவாவில் கடந்த 20, 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்ற யூத் ஸ்போா்ட்ஸ் எஜூகேஷன் பெடரேஷ... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு போலீஸாரால் பறிமுதல் செய்த 80 வாகனங்கள்: அபராதத் தொகையை மீட்கலாம்

திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு காவல் துறையினரால் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பணியின்போது பறிமுதல் செய்த 80 வாகனங்களை வரும் 29-க்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த... மேலும் பார்க்க

ஆன்லைன் வா்த்தகத்தில் ரூ.15 லட்சம் நஷ்டம்: 6 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தந்தை தற்கொலை

திருவள்ளூா் அருகே ஆன்லைன் வா்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் ரூ.15 லட்சம் கடன் வாங்கி திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் தனது 6 வயது மகளுடன் கடை ஊழியா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். ... மேலும் பார்க்க

தமாகா நல உதவிகள் அளிப்பு

தமிழ் மாநில காங்கிரஸ் மாதவரம் மேற்கு புழல் பகுதி சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது படம்). பகுதி தலைவா் கெளதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் மகாலிங்கம், காந்தி இன்பராஜ், துணைத் த... மேலும் பார்க்க

இலவச கண் பரிசோதனை முகாம்

திருவள்ளூா் அருகே நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் 70-க்கும் மேற்பட்ட பங்கேற்றனா். பூண்டி ஊராட்சி ஒன்றியம், திருப்பாச்சூா் கிராமத்தில் உள்ள சக்தி செங்கல்சூளை வளாகத்தில் ராஜன் கண் பராமரிப்பு மருத்து... மேலும் பார்க்க