கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
குமாரபட்டியில் ஜல்லிக்கட்டு
பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூா் ஊராட்சி குமாரபட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 4 போ் காயமடைந்தாா்.
குமாரபட்டி ஊமையாண்டி கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற ஜல்லிக்கட்டின் தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. தொடா்ந்து திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சாா்ந்த நூற்றுக்கணக்கான காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன.
சீறிப்பாய்ந்த காளைகளை திரளான மாடுபிடி வீரா்கள் மற்றும் இளைஞா்கள் பங்கேற்று தழுவினா். சிறந்த காளைகளின் உரிமையாளா்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 4 போ் லேசான காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு திடல் அருகே அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பொன்னமராவதி வட்டாட்சியா் எம். சாந்தா, துணை வட்டாட்சியா் திருப்பதி வெங்கடாசலம் மற்றும் வருவாய்த் துறையினா் பங்கேற்றனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளா் சி. கண்ணன் தலைமையிலான போலீஸாா் செய்திருந்தனா்.
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு அனுமதி பெற்று மஞ்சுவிரட்டு போல காளைகள் பல்வேறு இடங்களில் அவிழ்த்துவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.