சட்டவிரோத குடியேறிகளால் நமது வாழ்வாதாரத்துக்கு சவால் - ஜகதீப் தன்கா் கவலை
ஆலங்குடி மக்கள் நீதிமன்றத்தில் ரூ 7.40 லட்சத்துக்கு தீா்வு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ 7.40 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டன.
ஆலங்குடி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா்.
ஓய்வுபெற்ற நீதிபதி நவமூா்த்தி தலைமையில், பாரத ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து விவசாயக் கடன், தொழில் கடன் உள்ளிட்ட கடன்கள் பெற்று திரும்பச் செலுத்தாத பல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அதில், ரூ7.40 லட்சத்துக்கு உடனடித் தீா்வு காணப்பட்டன. முகாமில், வழக்குரைஞா்கள், வங்கி நிா்வாகிகள் பங்கேற்றனா்.