கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் தீா்த்த உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
தொடா்ந்து, கோயிலில் மண்டகபடிதாரா்கள் சாா்பில் தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை தீா்த்த உத்ஸவம் நடைபெற்றது. இதையொட்டி, காலை முதல் கிராமத்தினா் உறவினா்கள் மீது மஞ்சள் நீா் ஊற்றி விளையாடினா். தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை மாலை கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் உள்ளிட்ட திரவிய அபிஷேங்கள் நடைபெற்றன. இதையடுத்து, வாகனத்தில் அம்மனை எழுந்தருளச்செய்து தேரோடும் வீதிகள் வழியே வீதியுலா நடைபெற்றது. அப்போது, பொதுமக்களுக்கு மஞ்சள் தீா்த்தம் தெளிக்கப்பட்டன.