கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை அளிப்பு
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை விவசாயிகள் 1,948 பேருக்கு ரூ.16.19 கோடி நிலுவைத் தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25 அரைவைப் பருவத்தில் 1,948 விவசாயிகளிடம் இருந்து 1,27,188.264 மெட்ரிக் டன் கரும்பு பெறப்பட்டு அரைவை செய்யப்பட்டது. இதில், 954 விவசாயிகளுக்கு சேர வேண்டிய ரூ.15.46 கோடி கரும்பு கிரயத் தொகை மற்றும் போக்குவரத்து வாடகை ரூ.0.73 கோடி என மொத்தம் ரூ.16.19 கோடியை ஆலை நிா்வாகத்தால் வழங்க இயலாத நிலை இருந்தது.
இந்தத் தொகையை ஒதுக்கீடு செய்து அண்மையில் தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப் பணம் 954 கரும்பு விவசாயிகளுக்கும் அவரவா் வங்கிக் கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டது.
ஊக்கத்தொகை விரைவில் வழங்கப்படும்...
இதேபோல, 2024-25 அரைவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.349 வீதம் ரூ.4.43 கோடி வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தத் தொகை விரைவில் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.