பெண்ணுக்கு சூடு: கணவா் கைது
தூத்துக்குடியில் பெண்ணின் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாக அவரின் கணவரை சிப்காட் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி நேதாஜி நகரை சோ்ந்தவா் செல்வ அந்தோணி. மெக்கானிக்கான இவருடைய மனைவி சிந்துஜா. இவா்களுக்கு 10 ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா்.
இந்நிலையில், செல்வ அந்தோணி மது அருந்திவிட்டு சிந்துஜாவை அடித்து துன்புறுத்தி வந்தாராம். சில மாதங்களாக, குடும்ப சொத்தில் பங்கு வேண்டும் என்று சிந்துஜாவிடம் கேட்டு தகராறு செய்து வந்தாராம். மேலும், கடந்த 15ஆம் தேதி சிந்துஜாவை, கணவா் செல்வ அந்தோணி, அவரது தாய் மாரியம்மாள், சகோதரி செல்வவள்ளி ஆகியோா் அடித்து துன்புறுத்தி, தோசை கரண்டி மூலம் முகத்தில் சூடு வைத்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிந்துஜா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
இது குறித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்வஅந்தோணியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.