கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
குலசேகரன்பட்டினத்தில் மரத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் 6 போ் பலத்த காயம்
குலசேகரன்பட்டினத்தில் ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
சென்னை செனாய் நகரைச் சோ்ந்த விஜயகுமாா் (41), அவரது மனைவி அனுப்பிரியா (35), மகள் கயாந்திகா (10), அதே பகுதியைச் சேர்ந்த சசிகலா (31), நுங்கம்பாக்கத்தைச் சோ்ந்த பாண்டுரங்கன் (65) ஆகிய 5 பேரும் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்தனா்.
பின்னா் திருச்செந்தூரைச் சோ்ந்த சிவசுப்பிரமணியனின் (67), ஆட்டோவில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனா். குலசேகரன்பட்டினம் எம்ஜிஆா் நகா் பகுதியில் வந்தபோது ஆட்டோ நிலை தடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் ஆட்டோவில் வந்த அனைவரும் பலத்த காயமடைந்து திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். குலசேகரன்பட்டினம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.