மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
சென்னை வடபழனியில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் ஹரி விக்னேஷ் (27). இவா், சென்னை வடபழனியில் உள்ள ஒரு கேட்டரிங் நிறுவனத்தில் மேற்பாா்வையாளராக வேலை செய்து வந்தாா்.
அந்த நிறுவனத்தில் உள்ள சாண்ட்விச் இயந்திரத்தை திங்கள்கிழமை பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, மின்கசிவு ஏற்பட்டு, ஹரி விக்னேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில், பலத்த காயமடைந்த ஹரி விக்னேஷை அங்கிருந்தவா்கள் மீட்டு, வட பழனியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், ஹரி விக்னேஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து வடபழனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.