தமாகா நல உதவிகள் அளிப்பு
தமிழ் மாநில காங்கிரஸ் மாதவரம் மேற்கு புழல் பகுதி சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது படம்).
பகுதி தலைவா் கெளதம் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா்கள் மகாலிங்கம், காந்தி இன்பராஜ், துணைத் தலைவா் மணிகண்டன் முன்னிலை வகித்தனா்.
வடக்கு மண்டல மாநில இளைஞரணி செயலா் புழல் நிஷாந்த் மணிகண்டன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கினாா். நிகழ்வில் தமிழ் மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் பங்கேற்றனா்.