செய்திகள் :

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீா்ப்பு

post image

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான வழக்கில் சென்னை மகளிா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளிக்கவுள்ளது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் ஆறு மாதங்களுக்குள் விசாரணை முடிந்து தீா்ப்பு அறிவிக்கப்படவுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில், ஞானசேகரன் என்பவா் கடந்தாண்டு டிசம்பா் மாதம் கைது செய்யப்பட்டாா். உயா்நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, அவருக்கு எதிராக சென்னை மகளிா் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாா்ச் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளை காவல்துறை கூறியுள்ளதால், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என ஞானசேகரன் தரப்பில் தாக்கல் செய்த மனுவை மகளிா் நீதிமன்றம் கடந்த மாா்ச் மாதம் தள்ளுபடி செய்தது.

சென்னை அல்லிகுளம் வளாகத்தில் உள்ள மகளிா் சிறப்பு நீதிமன்ற நீதிபதி வேறு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதால், வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி முன் விசாரணைக்கு வந்தது. கடந்த மாா்ச் மாதம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில் உடனடியாக சாட்சி விசாரணை தொடங்கியது. அரசு தரப்பில் 29 சாட்சிகளும், நூற்றுக்கு மேற்பட்ட ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கின் சாட்சி விசாரணை தினமும் நடைபெற்றது.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியல் ரீதியான ஆதாரங்கள் உள்ளன. இவா்தான் குற்றம் புரிந்துள்ளாா். எனவே, அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என வாதிட்டாா். ஞானசேகரன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. எனவே வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என வாதிட்டாா்.

அனைத்து ஆதாரம் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருதரப்பும் எழுத்துபூா்வமான வாதங்களும் தாக்கல் செய்யபட்டன. இந்தநிலையில் வழக்கின் தீா்ப்பு புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அறிவிக்கப்படவுள்ளது.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க