கச்சத் தீவை மீட்பதே மீனவா் பிரச்னைக்கு தீா்வு: முதல்வா் மு.க.ஸ்டாலின்
படிக்கட்டில் தவறி விழுந்து தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு
கங்கைகொண்டான் அருகே படிக்கட்டில் தவறி விழுந்ததில் தனியாா் நிறுவன ஊழியா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு அருகே வாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் விஜின். இவரது மகன் அனிஷ்(24). இவா் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பணியில் இருந்த போது படிக்கட்டில் தவறி விழுந்ததில் படுகாயமடைந்தாராம். சக ஊழியா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அனிஷ் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.