செய்திகள் :

2025 சர்வதேச யோகா நாள்: மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

post image

புதுதில்லி: 2025 ஆம் ஆண்டு சர்வதேச யோகா நாளில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தையும் இளைஞர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புகளையும் பாராட்டியவர், இந்த முறை யோகா நாளை ஆர்வத்துடன் கூடிய சூழலுடன் கொண்டாடுவது குறித்து யோசிக்க வேண்டும்.

11 ஆவது சர்வதேச யோகா நாள் கொண்டாடத்திற்கு ஒரு மாதத்திற்கும் குறைவான நாள்களே உள்ள நிலையில், 122 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, உலகம் முழுவதும் உள்ள மக்கள் நல்வாழ்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கு யோகாவை ஏற்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் யோகா நாளுக்கான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக குறிப்பிட்ட மோடி, 2015 ஜூன் 21 ஆம் தேதி 'யோகா நாள்' தொடங்கியதில் இருந்து அதன் மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த முறையும், யோகா நாள் தொடர்பாக உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே ஆர்வமும் உற்சாகமும் பெருமளவில் காணப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியை ஆர்வத்துடன் கூடிய சூழலுடன் கொண்டாடுவது குறித்து ஆக்கப்பூர்வமாகச் சிந்திக்குமாறு வலியுறுத்திய பிரதமர் மோடி, யோகா இணைப்பு சங்கிலிகளை உருவாக்குவது முதல் புகழ்பெற்ற இடங்களில் யோகா பயிற்சி செய்வது வரை, மக்கள் சர்வதேச யோகா நாளை ஒரு துடிப்பான, அனைவரையும் உள்ளடக்கிய இயக்கமாக மாற்றி வருகின்றனர்.

மாநிலத்தில் வலுவான யோகா கலாசாரத்தை வளர்க்கும் நோக்கில் யோகா ஆந்திரம் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் 10 லட்சம் யோகா பயிற்சியாளர்களைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்கள் எவ்வாறு ஆரோக்கியப் புரட்சியில் முன்னணியில் இருந்து வழிநடத்த முடியும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் சர்வதேச யோகா நாள் கொண்டாட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

தனிப்பட்ட முறையிலும் தேசிய வளர்ச்சியிலும் யோகாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மோடி, யோகாவில் அதிகரித்து வருவம் பெருநிறுவனங்களின் பங்களிப்புக்கு பாராடு தெரித்த மோடி, சில நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் யோகா பயிற்சிக்காக தனி இடத்தை ஒதுக்கியுள்ளன. சில நிறுவனங்கள் 'யோகா செய்வதற்கான நேரங்களை' ஒதுக்கியுள்ளன. இது, நாட்டின் சுகாதார இயக்கத்திற்கு தனியார் துறை எவ்வாறு பங்களிக்கிறது என்பதற்கான ஆக்கபூர்வமான அறிகுறி.

யோகா நாள் கொண்டாட்டங்களின் பத்தாண்டுகளை நினைவுகூரவும், சர்வதேச யோகா நாளின் 11 ஆவது பதிப்பைக் குறிக்கவும், ஆயுஷ் அமைச்சகம் 10 அறிமுக நிகச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முயற்சிகள் பல்வேறு சமூக மற்றும் தொழில்முறை அமைப்புகளில் யோகாவின் அணுகலையும் பொருத்தத்தையும் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

அவற்றில், ஏற்கனவே 6,000-க்கும் அதிகமான நிறுவனங்கள் நிகழ்வுகளை நடத்த யோகா சங்கம் பதிவு செய்துள்ளன. இது நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய சமூகம் சார்ந்த நல்வாழ்வு நிகழ்வுகளில் ஒன்றாகும். இளைஞர்களை மையமாகக் கொண்ட மின்னணு சாதனங்களில் இருந்து விலகிய யோகா வேகமாக பிரபலமடைந்து வருகிறது. முன்னணி நிறுவனங்கள் அடுத்த தலைமுறை பயிற்சியாளர்களை ஊக்குவிக்க முன்வருகின்றன. இதற்கிடையே, சம்யோகா என்ற ஒரு புரட்சிகரமான முயற்சியானது ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட யோகாவை ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, சித்தா, இயற்கை மருத்துவம், சோவா ரிக்பா எனும் குணப்படுத்தும் அறிவியல் உள்ளிட்ட முக்கிய சுகாதார அமைப்புகளில் ஒருங்கிணைக்க முயன்று வருகிறது.

"யோகா உங்கள் வாழ்க்கையை மாற்றும்" என்று மோடி கூறியுள்ள நிலையில், மக்கள்,நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் சர்வதேச யோகா நாள் 2025-ஐ அர்த்தமுள்ள மற்றும் புதுமையான வழிகளில் கொண்டாட அழைப்பு விடுத்துள்ளார்.

யோகா என்பது வெறும் பயிற்சி அல்ல - இது தேசிய ஆரோக்கியம், உள் அமைதி மற்றும் உலகளாவிய நல்வாழ்வுக்கான ஓர் இயக்கம். யோகா அன்றாட வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறுகிறது என ஆயுஷ் அமைச்சகம் கூறியுள்ளது.

மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதி 60 சதுரமைல் பரப்பளவு கொண... மேலும் பார்க்க

ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்

மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48 ஆவது... மேலும் பார்க்க

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.சேலம் நெடுஞ... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.க... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

புதுதில்லி: சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்த்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மாதத்தின்... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மே 26, 27 இல் குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.மே 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மே 26 ஆம் தேதி காலை 11.15 மணியளவில்... மேலும் பார்க்க