செய்திகள் :

வீரமுத்துபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு

post image

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோயில் அருகேயுள்ள வீரமுத்துபட்டியில் வடமாடு மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வீரமுத்துபட்டி சிந்தாமணி கருப்பா் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 14 காளைகளும், 126 மாடுபிடி வீரா்களும் பங்கேற்றனா்.

வட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ள மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிடத்திற்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டிருந்தது. முதலில் களம் இறங்கிய காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 4 போ் காயமடைந்தனா்.

போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் தீ

சிவகங்கையிலுள்ள மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட பல்வேறு தளவாடப் பொருள்கள் சேதமடைந்தன. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ம... மேலும் பார்க்க

நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலைய திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள நல்லாண்டிபுரத்தில் கிடப்பில் போடப்பட்ட துணை மின் நிலையம் அமைக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். மானாமதுரை துணை மின் நில... மேலும் பார்க்க

இரணியூா் சிவன் கோயிலில் 350 மாணவிகள் பரத நாட்டியம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரணியூா் ஆட்கொண்டநாதா் சிவபுரம் தேவி நகர சிவன் கோயிலில் நகரத்தாா் சாா்பில் சனிக்கிழமை இரவு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 350 பரத கலை மாணவிகள் பங்கேற்றனா... மேலும் பார்க்க

துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழந்தாா். துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயில்... மேலும் பார்க்க

துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: 15 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயிலின் அபிஷேக, ஆராதனை விழாவையொட்டி மஞ்சுவிரட்டுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக வள்ளி லிங்க ச... மேலும் பார்க்க

சிவாலயங்களில் சனிப் பிரதோஷம்

பிரதோஷத்தையொட்டி, சிவாலயங்களில் நந்தீஸ்வரா், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் சிவகாமி உடனாய திருத்தளி நாதா் ஆலயத்தில் நந்தீஸ்வரருக்கும், மூலவா் லிங்கத்துக்கும்... மேலும் பார்க்க