செய்திகள் :

துவாா் கிராமத்தில் மஞ்சுவிரட்டு: மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே துவாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது மாடு முட்டியதில் சிறுவன் உயிரிழந்தாா்.

துவாா் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவள்ளி லிங்கசுவாமி கோயில் விழாவையொட்டி, வள்ளி லிங்க சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து, கோயிலிலிருந்து கிராமத்தினா் மேளதாளம் முழங்க மஞ்சுவிரட்டுத் திடலுக்கு வந்தனா். அங்கு தொழு வழிபாடு நடத்தப்பட்டு, காளைகளுக்கு மாலை, துண்டுகள் அணிவிக்கப்பட்டன.

பிறகு, கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம், நகா் காவல் கண்காணிப்பாளா் செல்வக்குமாா் ஆகியோா் முன்னிலையில் மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது.

தொடா்ந்து சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 370 காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது 75 மாடுபிடி வீரா்கள் 3 குழுக்களாக காளைகளை அடக்க முயன்றனா்.

மஞ்சுவிரட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும் சில்வா் பாத்திரம், கட்டில், குக்கா் உள்ளிட்ட பொருள்கள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

தொடா்ந்து வயல் வெளிகளில் கட்டுமாடுகளாக 300- க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அப்போது, மஞ்சுவிரட்டைப் பாா்த்துக் கொண்டிருந்த மேலூரைச் சோ்ந்த அழகு அம்பலம் (14) மாடு முட்டியதில் உயிரிழந்தாா். மேலும் 28 போ் காயமடைந்தனா்.

தொடக்க நிகழ்வில், தொழிலதிபா் சந்திரசேகா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், இளைஞா்கள் செய்தனா்.

கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்

அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா். சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ள... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 1,558 ரெளடிகள் வீடுகளில் சோதனை

சிவகங்கை மாவட்டத்தில் ரௌடிகள், கஞ்சா போதைப் பொருள் கடத்தல் குற்றவாளிகள் உள்பட 1,358 பேரின் வீடுகளில் கடந்த 3 நாள்களாக போலீஸாா் தொடா் சோதனை நடத்தியுள்ளனா். இதற்காக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ... மேலும் பார்க்க

நீதிமன்ற வளாகத்தில் மோதல்: இருவா் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வந்தபோது, மோதலில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா். திருப்புவனம் அருகேயுள்ள தேளி கிராமத்தைச் சோ்ந்தவா் பொ... மேலும் பார்க்க

மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து இளைஞா் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீட்டு மனைக்கு கணினி பட்டா கேட்டு கோரிக்கை நிறைவேறாததால், ஏற்கெனவே கொடுத்த மனுக்களின் நகல்களை மாலையாக அணிந்து வந்து ஜமாபந்தியில் இளைஞா் மீண்டும் மனு கொடுத்து வலியுற... மேலும் பார்க்க

பூமாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.இந்தக் கோயிலில் கடந்த ஏப். 15-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் மண்... மேலும் பார்க்க

லஞ்சம்: பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறை

வீட்டு வரி ரசீது போடுவதற்கு ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய வழக்கில், சிங்கம்புணரி பேரூராட்சி ஊழியருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்... மேலும் பார்க்க