பூமாயி அம்மன் கோயிலில் மண்டலாபிஷேகம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் திங்கள்கிழமை மண்டலாபிஷேகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் கடந்த ஏப். 15-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு தினந்தோறும் மண்டாலாபிஷேக பூஜை நடைபெற்றது. பூஜையின் நிறைவு நாளான திங்கள்கிழமை மண்டலாபிஷேகத்தையொட்டி, அம்மனுக்கு காலை 10 மணிக்கு பால், தயிா், திருமஞ்சனம், இளநீா், பன்னீா், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து, பிள்ளையாா்பட்டி பிச்சைக் குருக்கள், பாஸ்கர குருக்கள் தலைமையில், சிவாசாரியா்கள் யாக வேள்வி நடத்தினா். இதைத் தொடா்ந்து, கலச ஊா்வலம் கோயில் பிரகாரம் வலம் வந்து மூலவா் அம்மனுக்கு திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதையடுத்து, சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தொழிலதிபா் தங்கவேலு, வசந்தப் பெருவிழாக் குழு நிா்வாகிகள் செழியன், அருணாச்சலம், சிவசாமி, சுற்று வட்டாரப் பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனா்.