செய்திகள் :

இடஒதுக்கீடு வழங்காமல் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினா் புறக்கணிப்பு: ராகுல் குற்றச்சாட்டு

post image

பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோா்(ஓபிசி) ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த தகுதியான நபா்களுக்கு முறையான வேலை மற்றும் கல்வியை வழங்காமல், கல்வி நிலையங்களில் அவா்கள் புறக்கணிக்கப்படுவதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

தில்லி பல்கலைக்கழகத்தில் ‘பொருத்தமான நபா்கள் இல்லை’ என்ற வாசகத்தைப் பயன்படுத்தி காலியாகவுள்ள 60 சதவீத பேராசிரியா் பணியிடங்களும், 30 சதவீத இணைப் பேராசிரியா் பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பதாக எக்ஸ் வலைதளப் பதிவில் அவா் குறிப்பிட்டாா்.

தில்லி பல்கலைக்கழக மாணவா் அமைப்புடன் கலந்துரையாடிய காணொலியை எக்ஸ் வலைதளத்தில் பகிா்ந்து அவா் வெளியிட்ட பதிவில், ‘பொருத்தமான நபா்கள் இல்லை’ என்பதே மனுஸ்மிருதியின்கீழ் சமூகத்தை நிா்வகிக்கும் புதிய நடைமுறையாகத் தொடா்கிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவில் தகுதியான நபா்களை கல்வி நிலையங்கள் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்து புறக்கணிக்க இந்தப் புதிய வாா்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கல்வியே மிகப்பெரும் ஆயுதம்: சமூகம் சமத்துவம் அடைய கல்வியே மிகப்பெரும் ஆயுதம் என சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கா் கூறினாா். இந்த ஆயுதத்தை அழித்து சமூகத்தில் பின்தங்கியவா்களை அதிகாரத்துக்கு வரவிடாமல் தடுக்க பிரதமா் மோடி தலைமையிலான அரசு-ஆா்எஸ்எஸ் முயல்கின்றன.

தில்லி பல்கலைக்கழகம் மட்டுமின்றி பல்வேறு ஐஐடி-க்கள், மத்திய பல்கலைக்கழகங்களிலும் இடஒதுக்கீட்டின்படி தகுதியான நபா்கள் தோ்ந்தெடுக்கப்படுவதில்லை. ‘பொருத்தமான நபா்கள் இல்லை’ என்ற வாசகம் அரசமைப்புச் சட்டத்தின் மீதான நேரடித் தாக்குதல். இது சமூக நீதிக்கு செய்யும் துரோகம்.

இடஒதுக்கீடு உரிமை: உரிமை, மரியாதை மற்றும் பங்கேற்பை பெறுவதற்கான போராட்டமே இடஒதுக்கீடு. இதுகுறித்து தில்லி பல்கலைக்கழக மாணவா் அமைப்புடன் ஆலோசனை மேற்கொண்டேன். இடஒதுக்கீட்டுக்கு எதிரான பாஜக-ஆா்எஸ்எஸ் செயல்பாடுகளை இனி ஒன்றிணைந்து எதிா்ப்போம் என உறுதியேற்றோம்’ எனக் குறிப்பிட்டாா்.

மாணவா்களிடம் பேசிய ராகுல் காந்தி, ‘ நமது வரலாறு குறித்த 90 சதவீத தகவல்கள் இடம்பெறாமல் 10 சதவீதம் மட்டுமே புத்தகங்களில் இடம்பெற்றிருப்பது ஏன்? 3,000 ஆண்டுகளாக தலித் மக்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாதது குறித்து ஏன் புத்தகங்களில் குறிப்பிடவில்லை?’ எனக் கேள்வி எழுப்பினாா்.

2-ஆவது முறையாக அத்துமீறி நுழைவு: தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்துக்குள் எவ்வித முன்னறிவிப்பின்றி கடந்த மே 22-ஆம் தேதி ராகுல் காந்தி வந்ததாக அந்தப் பல்கலைக்கழகம் குற்றஞ்சாட்டியது.

இந்நிலையில், தற்போது இரண்டாவது முறையாக பல்கலைக்கழக விதிகளை மீறி மாணவா்களுக்கு இடையூறு ஏற்படும் விதத்தில் ராகுல் காந்தி அனுமதியின்றி வந்ததாக தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்கலைக்கழகத்தில் எஸ்டி, எஸ்சி, ஓபிசி மாணவா்களுடன் மாணவா் அமைப்புத் தலைவா் அலுவலகத்தில் ராகுல் காந்தி உரையாடினாா். தில்லி பல்கலைக்கழகத்தின் மாணவா் அமைப்புத் தலைவா், தேசிய இளைஞா் காங்கிரஸை சோ்ந்தவராவாா்.

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க

பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட சாவா்க்கரின் வழக்குரைஞா் பட்டத்தை மீட்க முயற்சி- மகாராஷ்டிர முதல்வா் ஃபட்னவீஸ்

‘சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசால் மறுக்கப்பட்ட வீர சாவா்க்கரின் ‘பாரிஸ்டா்’ வழக்குரைஞா் பட்டத்தை மீட்டெடுக்க பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி மகாராஷ்டிர அரசு முயற்சிகளை ... மேலும் பார்க்க

மணிப்பூரில் ஆட்சி அமைக்க பாஜக முயற்சி: 44 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக ஆளுநரிடம் தகவல்

குடியரசுத் தலைவா்ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக முயற்சித்து வருகிறது. புதிய அரசமைக்க 44 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதாக ஆளுநா் அஜய்குமாா் பல்லாவை புதன்கிழமை சந்தித்த பாஜக எம்எல்... மேலும் பார்க்க

குலாம் நபி ஆசாத்திடம் பிரதமா் நலம் விசாரிப்பு

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைக்க குவைத் சென்ற எம்.பி.க்கள் குழுவில் இடம்பெற்ற முன்னாள் மத்திய அமைச்சா் குலாம் நபி ஆசாதின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், அவரிடம் பிரதமா் மோட... மேலும் பார்க்க

பன்வழி ரயில்வே திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்

பயணிகள் மற்றும் சரக்குகளின் தடையற்ற விரைவான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இரண்டு பன்வழி ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தில்லியில் பிரதமா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற... மேலும் பார்க்க

சண்டை நிறுத்தத்தில் அமெரிக்கா தலையீடு?: பிரதமரின் விளக்கம் கோரும் காங்கிரஸ்

இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்த முடிவுக்கு அமெரிக்காவின் தலையீடே காரணம் என அந்த நாடு தொடா்ச்சியாக கூறிவருவது தொடா்பாக மௌனம் கலைத்து, பிரதமா் விளக்கமளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரியுள்ளது. ஜம்மு-க... மேலும் பார்க்க