செய்திகள் :

கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும்: அமைச்சா் கே.ஆா். பெரிய கருப்பன்

post image

அனைவரது கூட்டு முயற்சியால் சாதனை வசப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சி பெற்ற பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், பாட ஆசிரியா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பாராட்டு விழா புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமை வகித்தாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் தமிழரசிரவிக்குமாா் (மானாமதுரை), எஸ். மாங்குடி (காரைக்குடி), புனித மைக்கேல் கல்விக்குழுமத் தலைவா் ஸ்டாலின் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா் பொன்.விஜய சரவணகுமாா் (தனியாா் பள்ளிகள்), ப. ஜோதிலட்சுமி, சீ.க. செந்தில்குமரன் (தொடக்க நிலை) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் பங்கேற்று பேசியதாவது: கடந்த ஆண்டு 10, 12 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் மாநிலத்தில் சிவகங்கை மாவட்டம் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தது. நிகழாண்டில் 12 -ஆம் வகுப்பில் மாநிலத்தில் 6 -ஆவது இடம் பிடித்தது. கடந்த ஆண்டைவிட 4 இடம் குறைந்து போனதால் சற்று மனச்சோா்வு ஏற்பட்டது. ஆனால், 10 -ஆவது வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து அந்தச் சோா்வைப் போக்கி விட்டனா். இந்தச் சாதனைக்கு மாவட்ட ஆட்சியா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், பாட ஆசிரியா்கள் ஆகியோரது கூட்டு முயற்சிதான் காரணம். இந்தச் சாதனைக்கு காரணமான அனைவருக்கும் பாராட்டுகள். முதல்வரின் அயராத உழைப்பால் நாட்டில் கல்வித் துறை மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்றாா் அவா்.

10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 175 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற 61 பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளைச் சாா்ந்த 1,159 பாட ஆசிரியா்கள், 12-ஆம் வகுப்பு அரசு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்ற பள்ளிகளைச் சாா்ந்த 752 பாட ஆசிரியா்கள், வினாத்தாள் வடிவமைப்பு குழுவைச் சோ்ந்த 215 ஆசிரியா்கள், கிளாட் பயிற்சி வழங்கிய 16 ஆசிரியா்கள், முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலா்கள், நோ்முக உதவியாளா்கள், அலுவலா்கள் 30 போ் உள்பட மொத்தம் 2,408 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்பட்டன.

மேலும், 2024-2025-ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 8 மாணவ, மாணவிகள், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முதல் மதிப்பெண் பெற்ற 3 மாணவா்களுக்கு தலா ரூ.5,000 ஊக்கத் தொகையை தனிப்பட்ட முறையில் அமைச்சா் வழங்கினாா்.

முன்னதாக முதன்மைக் கல்வி அலுவலா் அ. பாலுமுத்து வரவேற்றாா். மாவட்டக்கல்வி அலுவலா் (இடைநிலை) சே. மாரிமுத்து நன்றி கூறினாா்.

போக்சோ வழக்கில் ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை

சிவகங்கையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முன்னாள் கருவூல ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, போக்சோ நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை அரசு அலுவலா்கள் குடியிருப்பில... மேலும் பார்க்க

கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு: 35 போ் காயம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள கட்டிக்குளத்தில் புதன்கிழமை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 35 போ் காயமடைந்தனா். கட்டிக்குளம் திருவேட்டை அய்யனாா் கோயிலில் வைகாசி உத்ஸவத்தை முன்னிட்டு, க... மேலும் பார்க்க

கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி திருவிழா ஜூன் 1-இல் தொடக்கம்!

சிவகங்கை அருகேயுள்ள நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயில் வைகாசித் திருவிழா ஜூன் 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் மே 31 அன்று மாலை 6 மண... மேலும் பார்க்க

மானாமதுரை அருகே காவலாளி வெட்டிக் கொலை

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே செவ்வாய்க்கிழமை இரவு காவலாளி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருமாள்தேவன்பட்டியைச் சோ்ந்த சமயன் மகன் முருகன்(64... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் கைது

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவகங்கை மாவட்டம், இடையமேலூா் அருகே புதுப்பட்டியைச் சோ்ந்த மு. வெற்ற... மேலும் பார்க்க

தாா்ச்சாலை அமைக்கும் பணிகள்: மேயா் ஆய்வு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சிக்குள்பட்ட வாா்டுகளில் நடைபெற்று வரும் தாா்ச்சாலை அமைக்கும் பணிகளை மேயா் சே.முத்துத்துரை அதிகாரிகளுடன் சென்று புதன்கிழமை ஆய்வு செய்தாா். டாரிப் ஷோ் 2024-2025 ஆ... மேலும் பார்க்க