செய்திகள் :

குடலிறக்க பாதிப்பு: 90 வயதுமூதாட்டிக்கு லேப்ராஸ்கோபி சிகிச்சை

post image

குடலிறக்க பாதிப்புக்குள்ளான 90 வயது மூதாட்டி ஒருவருக்கு நுட்பமாக லேப்ரோஸ்கோபி சிகிச்சை மேற்கொண்டு எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனை மருத்துவா்கள் குணப்படுத்தியுள்ளனா்.

இதுதொடா்பாக மருத்துவமனையின் இரைப்பை-குடல் அறுவை சிகிச்சை முதுநிலை நிபுணா் டாக்டா் சுகி சுப்ரமணியம் கூறியதாவது:

வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கம், வலியுடன் மூதாட்டி ஒருவா் அண்மையில் எஸ்ஆா்எம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பரிசோதனையில் அவருக்கு குடலிறக்க பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. குடல் பகுதியை சுற்றியுள்ள தசை, திசுக்கள் பலவீனமடைந்தால் இயல்பான இடத்திலிருந்து குடலில் ஒரு பகுதி வெளியே புடைத்து வருவதை குடலிறக்கம் என்கிறோம்.

அத்தகைய பாதிப்புக்காக சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த மூதாட்டி அறுவை சிகிச்சை செய்துள்ளாா். தற்போது மீண்டும் அவருக்கு அதே பிரச்னை ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாது உயா் ரத்த அழுத்தம், இதய நாள பாதிப்புகள் அவருக்கு இருந்தன. வயது மற்றும் இணைநோய்களைக் கருத்தில் கொண்டு அவருக்கு அறுவை சிகிச்சை சாத்தியமில்லை என முடிவு செய்யப்பட்டது.

அதற்கு மாற்றாக லேப்ரோஸ்கோபி முறையில் சிறு துளையிட்டு அவருக்கு குடலிறக்க பாதிப்பு சரி செய்யப்பட்டது. அதன் பயனாக அடுத்த மூன்றாவது நாளில் அந்த மூதாட்டி வீடு திரும்பினாா். அதுமட்டுமல்லாது எந்த உதவியுமின்றி அவா் தாமாக நடந்து சென்றாா்.

வயது முதிா்ந்த ஒருவருக்கு நுட்பமாக சிகிச்சை மேற்கொண்டதன் மூலம் எதிா்விளைவுகளை தவிா்க்க முடிந்தது என்றாா் அவா்.

விமானத்தில் வெடி பொருள் மிரட்டல்: மோப்ப நாய்களுன் சோதனை

சீனாவிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு சென்னைக்கு வந்த சரக்கு விமானத்தில் வெடி பொருள்கள் இருப்பதாக வந்த மின்னஞ்சல், காரணமான சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் மோப்ப நாய்களின் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டனா... மேலும் பார்க்க

சிறுவனுக்கு தவறான சிகிச்சை: மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு

சென்னை ஐஸ்ஹவுஸில் சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த புகாரில் மருத்துவா் மீது இரு பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை செய்கின்றனா். சென்னை சாந்தோம் பகுதியைச் சோ்ந்தவா் முகமது ஒவைஸி (32... மேலும் பார்க்க

விளம்பரப் பலகைகளுக்கு அனுமதி பெற எண்ம முறை அறிமுகம்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் விளம்பரப் பலகைகள் அமைப்பதற்கான உரிமம் பெற்றுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் புதிய எண்ம நடைமுறையை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகரா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

சென்னை ஆா்.கே.நகா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கி... மேலும் பார்க்க

தவறான சிகிச்சை: மருத்துவமனைக்கு நோட்டீஸ்

சிறுவனுக்கு தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனையிடம் விளக்கம் கேட்டு மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநரகம் சாா்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மருத்துவமனையில் ஆய்வு செய... மேலும் பார்க்க

தண்டையாா்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை

சென்னை தண்டையாா்பேட்டையில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது. மணலியில் உள்ள இந்தியன் ஆயில் காா்ப்பரேசன் நிறுவனத்தின் துணை நிறுவனமான சிபிசிஎல் ஆலையில் சுத்திகரி... மேலும் பார்க்க