`என்ன லவ் பண்ண மாட்டியா..' - வீடு புகுந்து பள்ளி மாணவியை குத்திக் கொன்ற இளைஞன்; ...
பாதுகாப்பு கோரி நரிக்குறவா் பெண்கள் மனு
திருவள்ளூா் அருகே நரிக்குறவா் காலனியில், கடனுக்கு அதிக வட்டி கேட்டு தகராறு செய்பவா்கள் மீது போலீஸில் புகாா் அளித்தும், நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்டோா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது குறித்து அவா்கள் அளித்த மனு: கடம்பத்தூா் ஒன்றியம், அதிகத்தூா் ஊராட்சியில் நரிக்குறவா் காலனியில் 50-க்கும் மேற்பட்டோா் குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். ஜோதிராஜ் மனைவி ஆஷா என்பவா், ஷீலாவிடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.20,000 கடனாக வாங்கினாராம். ஆஷாவின் கணவா் ஜோதிராஜ் பிரிந்து சென்ற நிலையில், தற்போது ஷீலா கொடுத்த கடனுக்கு அதிக வட்டி கேட்டு ஆஷாவிடம் தகராறு ஈடுபட்டராம்.
இந்த நிலையில், இளைஞா்கள் சிலருடன் நரிக்குறவா் காலனியில் வந்து ஷீலா தகராறில் ஈடுபட்டாராம்.
இது குறித்து, கடம்பத்தூா் காவல் நிலையம், மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தும், எந்த நடவடிக்கையும் இல்லையாம்.
எனவே, இது குறித்து நடவடிக்கை எடுப்பதுடன், நரிக்குறவா்கள்டியிருக்கும் பகுதியில் காவல் துறையினா் ரோந்து பணியில் ஈடுபடவும், கண்காணிப்பு கேமரா பொருத்தி அசம்பாவித சம்பவத்தை தடுக்கவும், பாதுகாப்பு வழங்கவும் வேண்டும் என தெரிவித்தனா்.