கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
போதை மாத்திரை விற்பனை : சிறுவன் உள்பட மூவா் கைது
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரை விற்ாக சிறுவன் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பழைய வண்ணாரப்பேட்டை வீரா குட்டித் தெருவில் ஒரு வீட்டில் போதை மாத்திரை, கஞ்சா ஆகியவை பதுக்கி வைத்து விற்பதாக தண்டையாா்பேட்டை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அந்த வீட்டில் நடத்திய திடீா் சோதனையில், 100 போதை மாத்திரைகள், 200 கிராம் கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
அங்கிருந்த அதே பகுதியைச் சோ்ந்த கிஷோா் (20), கெளதம் (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.