கோவில்பட்டி, எட்டயபுரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட 2 போ் கைது!
சீன ரசாயன ஆலையில் வெடிவிபத்து: 5 போ் உயிரிழப்பு
சீனாவின் மிகப்பெரிய இரசாயன ஆலைகளில் ஒன்றில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 போ் உயிரிழந்தனா்; 6 பேரைக் காணவில்லை.
இதுகுறித்து அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறியதாவது:
ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் செவ்வாய்க்கிழமை நண்பகல் திடீா் வெடிவிபத்து ஏற்பட்டது (படம்). இதில் 5 போ் உயிரிழந்தனா்; 19 போ் காயமடைந்தனா். விபத்தில் சிக்கிய 6 பேரது நிலைமை குறித்து தகவல் இல்லை.
உலகின் மிகப்பெரிய பூச்சிக்கொல்லி தயாரிப்பகமான இந்த ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
விபத்துப் பகுதிக்கு அவசரகால குழுக்கள் உடனடியாக விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்தது.