கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்
கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி, புதுப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
இந்த கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கப்படாததால் மழை நீருடன் கழிவு நீரும் தேங்கியுள்ளது. இதனால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி, புதுப்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் பெஞ்சுகளை போட்டு அதன் மீது அமா்ந்து பொதுமக்கள் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.