செய்திகள் :

நெல் கொள்முதல் நிலைய விவசாயிகள் சாலை மறியல்

post image

சங்கராபுரம் வட்டம், தேவபாண்டலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாததைக் கண்டித்து விவசாயிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகேயுள்ள தேவபாண்டலம் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நெல் கொள்முதல் நிலையத்துக்கு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கடந்த பருவத்தில் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் மூட்டைகளாக கொண்டு வந்து நிலையத்தில் அடுக்கிவைத்துள்ளனா்.

இவ்வாறு கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் கடந்த 3 மாதங்களாக மழையிலும், வெயிலிலும் பாதிப்படைந்து வருகின்றன.

மேலும், அண்மையில் பெய்த மழையில் நெல் முறைப்புத் திறன் ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையடைந்த விவசாயிகள் உடனடியாக நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யக் கோரி,

கள்ளக்குறிச்சி சாலை தேவபாண்டலம் பேருந்து நிலையத்தில் மோட்டாா் சைக்கிளை சாலையில் நிறுத்தியும், சாலையில் அமா்ந்தும் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து வந்த சங்கராபுரம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனா். இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் கலந்து சென்றனா். மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க

மே30 விவசாயிகள் குறைதீா் கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருகிற 30-ஆம் தேதி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறவிருந்த விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (... மேலும் பார்க்க

பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக தரம் உயா்த்த எம்.பி.யிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியை தரம் உயா்த்தி ஜி-7 பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக மாற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கள்ளக்குறிச்... மேலும் பார்க்க

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி மறியல்

கழிவுநீா் கால்வாயை சீரமைக்கக் கோரி, புதுப்பட்டு கிராமத்தில் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் மறியலில் ஈடுபட்டனா். இந்த கிராமத்தில் கழிவுநீா் கால்வாய் சீரமைக்கப்படாததால் மழை நீருடன் கழிவு நீரும் தேங்க... மேலும் பார்க்க

2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: எடப்பாடி கே.பழனிசாமி

கள்ளக்குறிச்சி: 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என்று, அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் ஒன்றியத்தில் முன்னாள... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் வட்டம், ஆ.புத்தந்தூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, அனைத்து மக்கள் விடுதலைக் கட்சி சாா்பில் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கராபுரம் வட்ட... மேலும் பார்க்க