சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக ம...
கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் போராடி மீட்ட வீரர்கள்
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.
காற்றுடன் கூடிய இந்தத் தொடர் மழையால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன.
பேரிடர் அபாயம் நிறைந்த பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளில் அரசுத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் மழையால் ஆறுகளிலும் நீரோடைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
கரையோரப் பகுதிகளில் மக்கள் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கூடலூர் அருகில் உள்ள ஓவேலி பகுதியில் கார் மூலம் ஆற்றைக் கடக்க நேற்றுமுன்தினம் இரவு மூன்று நபர்கள் முயற்சி செய்துள்ளனர்.
பாதி ஆற்றைக் கடக்கையில் காட்டாற்று வெள்ளத்தில் கார் இழுத்துச் செல்லப்பட்டு பாறை ஒன்றின் மீது மோதி நின்றுள்ளது.
காரில் இருந்து வெளியேறிய மூவரும் காரின் மீது ஏறி நின்று உதவிக்குத் தவித்துள்ளனர்.
உள்ளூர் மக்கள் மூலம் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விடிய விடியப் போராடி மூன்று பேரையும் பத்திரமாக மீட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்துத் தெரிவித்த காவல்துறையினர், "கூடலூர், ஓவேலி வனச்சரகத்தில் தற்காலிக யானை விரட்டும் காவலராகப் பணியாற்றி வரும் ராஜேஷ், கேரள மாநிலம், மஞ்சேரியைச் சேர்ந்த நண்பர்களான ஹாண்ரோ தாமஸ், அருண் தாமஸ், ஆகியோர் வாகனத்தில் ஓவேலி சென்றுள்ளனர்.

தடை செய்யப்பட்ட பகுதியில் இரவு 11 மணியளவில் வாகனத்தில் திரிந்த அவர்கள் பாண்டியாற்றை வாகனம் மூலம் கடக்க முயன்ற போது, ஆற்று வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
வெளியேற முடியாமல் தத்தளித்த மூவரும், வாகனத்தின் மீது ஏறி நின்று அலறியபடி உதவி கேட்டுள்ளனர்.
கூடலூர் தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி மூவரையும் பாதுகாப்பாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நியூஹோப் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY