செய்திகள் :

அடையாளம் தெரியாத வாகனம் மோதி காவல் உதவி ஆய்வாளர் பலி

post image

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூர் புறவழிச்சாலையில் மேம்பாலத்தின் மீது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஞாயிற்றுக்கிழமை பலியானார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்துக்குள்பட்டது ராயர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் சாமிநாதன் (54), இவர் வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்தார். இவரது மனைவி தங்கம் (47). இவர் ராயர்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவர். இவர்களுக்கு விஜயலட்சுமி (14), ஆதீஷ்வர்மா (11) இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் தென்கீரனூர் மேம்பாலத்தில் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் நிகழ்விடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டூா் காவிரியில் ஆயிரக்கணக்கில் இறந்து மிதக்கும் மீன்கள்!

மேட்டூா்: மேட்டூா் அணையின் நீா்த் தேக்கப் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இறந்து கரை ஒதுங்கிய மீன்களை பொதுமக்கள் அள்ளிச்சென்றனா். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர் தேக்கப் பகுதி 60 சதுரமைல் பரப்பளவு கொண... மேலும் பார்க்க

ஒரேநாளில் மேட்டூா் அணை பூங்காவில் கட்டணமாக ரூ.1,58,930 வசூல்

மேட்டூா்: மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை ஒரேநாளில் கட்டணமாக ரூ.1,58,930 வசூலிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 48 ஆவது... மேலும் பார்க்க

இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை

சேலம்: சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இபிஎஸ் வீட்டுக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.சேலம் நெடுஞ... மேலும் பார்க்க

2025 சர்வதேச யோகா நாள்: மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க பிரதமர் மோடி அழைப்பு

புதுதில்லி: 2025 ஆம் ஆண்டு சர்வதேச யோகா நாளில் மக்கள் பெருந்திரளாகப் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வளர்ந்து வரும் உலகளாவிய ஆர்வத்தையும் இளைஞர்கள் தலைமையிலான கண்டுபிடிப்புகளையும் ... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது: பிரதமர் மோடி

புதுதில்லி: சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்த்தில் ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் தெரிவித்தார். மாதத்தின்... மேலும் பார்க்க

பிரதமர் மோடி மே 26, 27 இல் குஜராத் பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மே 26, 27 ஆகிய தேதிகளில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார்.மே 26, 27 ஆகிய இரண்டு நாள்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, மே 26 ஆம் தேதி காலை 11.15 மணியளவில்... மேலும் பார்க்க