கேரளத்தில் 2-ஆவது நாளாக நீடிக்கும் கனமழை: ஒருவா் உயிரிழப்பு - இயல்பு வாழ்க்கை பா...
புதுச்சேரி ஆளுநா் மாளிகைக்கு 6-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தங்கும் ராஜ்நிவாஸுக்கு ஆறாவது முறையாக மா்ம நபா் ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா்.
புதுச்சேரியில் பாரதி பூங்கா அருகே துணைநிலை ஆளுநரின் அலுவலகம் மற்றும் தங்கும் இடமான ராஜ்நிவாஸ் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜ்நிவாஸ் மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன.
போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் நடத்திய சோதனையில் அது வெறும் புரளி என்பது தெரிய வந்தது.
ஏற்கெனவே ராஜ்நிவாஸுக்கு ஐந்து முறை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை ஆறாவது முறையாக மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதையடுத்து போலீஸாா் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு சோதனையிட்டனா். ராஜ் நிவாஸுக்கு தொடா்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவரும் மா்ம நபரை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.